மேலும் அறிய

Gold and silver rate : தங்கம் சவரனுக்கு ரூ.4,080 உயர்வு.! வெறும் 4 நாட்களில் புதிய உச்சம்- நகைப்பிரியர்கள் ஷாக்

Gold and silver rate today: தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 3,760  ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இருந்த போதும் இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கம் எப்போதும் குடும்பங்களின் விருப்பமான முதலீடாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக வீட்டில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களில் முக்கிய பங்கானது தங்கம் வகித்து வருகிறது. 

மேலும் அவசர தேவைகளுக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளது. மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக விற்கவோ அடகு வைக்கவோ முடியும். எனவே தங்கம் ஒரு சேமிப்பு பொருளாகவே பார்க்கப்படுகிறது. 

விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள், தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கிச் சேமித்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்றம் இறக்கம் காரணமாக பாதுகாப்பு முதலீடாக தங்கத்தை பார்க்கப்படுகிறது. இதனால் அதிகளில் தங்கத்தின் மீது முதலீடு செய்யப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் பெரும்பாலான மக்கள் வெள்ளியை தற்போதே வாங்கி குவித்து வருகிறார்கள். இதுவும் வெள்ளி விலை அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்வு அபாயகரமான அளவை தாண்டவில்லையென தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம் விலை உயர்வை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார். 

3 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 21ஆம் தேதி - தங்கம் கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்து 14,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்து 1,17,440 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 23ஆம் தேதி- தங்கம் கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் அதிகரித்து 14,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,18,880 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி- 24ஆம் தேதி- கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,890 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 1,19,120 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் வெள்ளி விலை 

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் சவரனுக்கு 3,760  ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 14,930 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 1,19, 440ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2லட்சத்து 95ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. 

 

 

தலைப்பு செய்திகள்

Kerala Bumper Lottery Result 2026 LIVE: முதல் பரிசே ரூ.10 கோடி; கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல்- யாருக்கு எவ்வளவு?
Kerala Bumper Lottery Result 2026 LIVE: முதல் பரிசே ரூ.10 கோடி; கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல்- யாருக்கு எவ்வளவு?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Kerala Bumper Lottery: வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
Upcoming Hybrid SUVs Diwali: தீபாவளிக்கு டபுள் தமாகா.! வெளியாகும் கியா சொரெண்டோ, ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் SUV-க்கள்; முழு விவரம்
தீபாவளிக்கு டபுள் தமாகா.! வெளியாகும் கியா சொரெண்டோ, ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் SUV-க்கள்; முழு விவரம்
US Iran War: 7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
Embed widget