Rachita Dhinesh : காதல் கணவரை பிரிந்திருக்க இதுதான் காரணமாம்.. ரச்சிதா-தினேஷ் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட்..
சின்னத்திரை வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என சந்தோஷமாக இருந்த ரச்சிதா- தினேஷ் ஜோடி கடந்த ஓரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி அவர்களின் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
சின்னத்திரையில் முன்னணியாக வலம் வந்த ரச்சிதா- தினேஷ் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்தான் இவர்களுக்கும் வந்துள்ளது. ஆனால் நண்பர்கள் இதனைப் பெரிதாக்கி இருவரும் பிரியும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டனர் எனக் கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் தங்க மீனாட்சியாக வலம் வந்தவர் தான் ரச்சிதா. கிராமத்துக் கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் வாயிலாக மக்கள் அனைவரின் நெஞ்சில் இடம் பெற்றுள்ளார் ரச்சிதா. முன்னதாக பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த நிலையில், சின்னத்திரை கதாநாயகன் தினேஷ்கும், ரக்சிதாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.
கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ரச்சிதாவிற்கும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தினேசும் திருமணத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்த சமயத்தில், திருமணத்திற்காக ரச்சிதா வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி கல்யாணம் நடந்தது.
இந்த சமயத்தில் தான் சரவணன் மீனாட்சி சீரியலில் கமிட் ஆனதோடு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார். சீரியலில் ஹிட் அடித்ததோடு காதலித்தவரை கரம் பிடித்த நிலையில் இவரது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக நகர்ந்துகொண்டிருந்தது. இதோடு திருமணமான சமயத்தில், தமிழகத்தின் மருமகளாகி விட்டேன் எனவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இப்படி இருவரும் மகிழ்ச்சியுடன் தங்களின் வாழ்க்கையை நடத்தி நிலையில் தான், ஜீ தமிழின் நாச்சியார்புரம் சீரியலில் இருவரும் இணைத்து நடித்து வந்தனர்.
இப்படி சின்னத்திரை வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்த ரச்சிதா- தினேஷ் ஜோடி கடந்த ஓரு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி அவர்களின் ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. இந்நிலையில்தான், இவர்கள் இருவரும் ஒரே துறையில் இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்தான் இருவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது. இதனை இவர்களே சரி செய்து வாழ்க்கை நடத்தியிருப்பார்கள். ஆனால் நண்பர்களன்னு சிலர் ஒரு சில ஆதாயங்களுக்காக இடையில் புகுந்து பிரச்சனையைப் பெரிதாகிவிட்டனர்.
இதனால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்ட நிலையில் பிரச்சனை பெரிதாகி இருவரும் பிரிந்துவிட்டனர். இதனையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்துவரும் நிலையில், இரு வீட்டுப் பெரியவர்களும் தலையிட்டு சமாதானம் செய்துவருகின்றனர். ஆனால் இதுவரை அந்த முயற்சியில் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தான் இதுக்குறித்து ரச்சிதா மற்றும் தினேஷ் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் தினேஷின் நண்பர்கள், மீண்டும் சீரியல் தயாரிப்புல இருக்கறதா தெரியுது என்றும், அவரது பர்சனல் பிரச்சனை பற்றி நான் எதுவும் பேசியது இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதோடு எப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதாவும் இந்த ஓராண்டு காலத்தில் தன்னுடைய கணவர் தினேஷ் குறித்து எந்த விஷயங்களையும் சோஷியல் மீடியாவில் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் விரைவில் இவர்கள் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.