Mithran R Jawahar : ‘ ‘துள்ளுவதோ இளமை’-ல பிரபுதேவாதான் நடிக்கிறதா இருந்துச்சு..’ பேட்டியில் போட்டுடைத்த திருச்சிற்றம்பலம் டைரக்டர்!
அவரு நெருப்பு மாதிரி. ஆர்டிஸ்ட் முதல் டெக்னீசியன் வரை அனைவரும் பயப்பிடுவார்கள். அவ்வளவு ஏன், தனுஷ் சாரே பயப்படுவார் என்று மித்ரன் ஜவஹர் பேசியுள்ளார்.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, திருச்சிற்றம்பலம் போன்ற ஃபீல் குட் காதல் படங்களை இயக்கிய டைரக்டர் மற்றும் செல்வராகவனின் துணை இயக்குநருமான மித்ரன் ஜவஹர் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
View this post on Instagram
முதலில் பேச துவங்கிய அவர், துள்ளுவதோ இளமையில் செல்வராகவனுடன் பணிபுரிந்த அனுபவத்தையும் அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்தார். மேலும் பேசிய அவர், அந்த படத்தில் பிரபுதேவா நடிக்கவிருந்தார். கடைசி நேரத்தில்தான் தனுஷ் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நெறியாளர் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்.
கேள்வி : முதல் படத்தில், தனுஷ் ஒரு பெரிய நடிகராக வருவார் என உங்களுக்கு தெரிந்ததா?
பதில் : தனுஷ் சார் ரொம்ப பொறுப்பானவர். கூச்சம் இல்லாமல் பேசி பழகுவார். மனதில் பட்டதை பேசுபவர்.பெரிய ஹீரோவாக வருவார் என நானே எதிர்பார்க்கவில்லை.
கேள்வி : மாணவராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். அவருக்கு முதலில் சினிமாவில் உடன்பாடு இருந்ததா?
பதில் : முதலில் இல்லை என்று நினைக்கிறேன். கஸ்தூரி ராஜா போல் செல்வராகவன் சார் இல்லை. செல்வ ராகவன் சார் பக்கத்திலே போக முடியாது, அவரு நெருப்பு மாதிரி. ஆர்டிஸ்ட் முதல் டெக்னீசியன் வரை அனைவரும் அவரை பார்த்தால் பயப்படுவார்கள்.
அவ்வளவு ஏன், தனுஷ் சாரே பயப்படுவார். சில நேரங்களில், அவர் ஒரு சில வசனங்களை விட்டு விடுவார். அதை தனுஷ் சாரிடம் சொன்னால், சொல்லாதீங்க சொல்லாதீங்க என்று சொல்வார். செல்வா சார் என்ன நினைத்தாரோ, என்ன எழுதினாரோ அதை நடத்தி காட்டினார். அதனால்தான் வெற்றி கிட்டியது. தனுஷ் சாரே, செல்வா சார் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
கேள்வி : காதல் கொண்டேன் கதையை உங்களிடம் முதலில் செல்வ ராகவன் சொன்னாரா?
பதில் : நானும் செல்வா சாரும் கொடைக்கானல் சென்று இருந்தோம். ஏதாவது சந்தேகம் இருந்தால்தான் என்னிடம் கலந்துரையாடுவார். இல்லையென்றால் அவரே, முழு கதையையும் எழுதிவிடுவார்.
மேலும் படிக்க : DSP First Look Poster : நான் ராஜா.. மீண்டும் போலீஸ் அவதாரத்தில் விஜய்சேதுபதி..வெளியானது 'டிஎஸ்பி' ஃபர்ஸ்ட் லுக்!