மேலும் அறிய

Thangalaan: விக்ரமின் தங்கலான் திரைப்படம் ஆஸ்கருக்கு செல்கிறதா? வெளியான புதிய தகவல்

தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரம்  நீண்ட தாடி, தலைமுடியுடன் பண்டைய கால காட்டுவாசி போன்று வித்தியாசமாக நடிக்கும் தோற்றம் ஏற்கனவே வெளியான நிலையில் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இத்தோற்றத்திற்காக விக்ரம் பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார்.

விக்ரம் ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் ஒரு சிறந்த நடிகர். இதற்காக அவர் உடல் எடையை அடிக்கடி குறைப்பதும் அதிகரிப்பதும் அனைவரும் அறிந்ததே.  அந்நியன், கந்தசாமி, பீமா, தெய்வத்திருமகள், கடாரம் கொண்டான்,  உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

தற்போது உருவாகி வரும் தங்கலான் திரைப்பபடமும் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் மோதலையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.

தங்கலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடப்பதாகவும் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும் தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் முயற்சிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகை பார்வதி அண்மையில் தங்லான் படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இந்த படம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாவது: “எனது அன்பான நண்பர் சமீபத்தில் எனக்கு ஒரு வாக்கியத்தை அனுப்பினார். தங்கலான் திரைப்படத்தில் நான் பணியாற்றிய என்னுடைய அனுபவத்தை கூற அந்த வாக்கியத்தை விட மிகச் சரியான வாக்கியத்தை என்னால் தேட முடியாது. காதல், பணம், புகழ் இவை அனைத்தையும் விட எனக்கு உண்மையை கொடுங்கள்”. இந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்திற்காக நான் சென்ற ஒவ்வொரு இடமும், நான் செய்த ஒவ்வொரு தேர்வும் எனது சுவர்களையும் முகமூடிகளையும்  சுக்குறூறாக நொறுக்கியது.

அதில் உண்மை மட்டுமே எஞ்சியது. இது எனக்கு மிகவும் முக்கியமானது” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க,

Thirumavalavan VCK: உள்நோக்கம் ஏதுமில்லை.. மாற்றுத்திறனாளிகள் பொறுத்தருளவும்; வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

மாஸ் காட்டும் சரத் பவார்..தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதரவு குரல்..பரபரக்கும் அரசியல் களம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget