Thalapathy vijay meets mk stalin: வா வா வா என் தலைவா..! நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட திரை தளபதியும் தமிழக தளபதியும்!
நடிகர் விஜயும், முதல்வர் ஸ்டாலினும் திருமண நிகழ்வில் சந்தித்துக்கொண்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயும், முதல்வர் ஸ்டாலினும் திருமண நிகழ்வில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#ThalapathyVijay Meets #Mkstalin pic.twitter.com/41xdmannfL
— S.Kalyani Pandiyan (@Kalyaniabp) April 6, 2022
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
View this post on Instagram
சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அண்மையில் படத்திலிருந்து ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இன்று பீஸ்ட் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், அந்தப்படத்திற்கான முதல்காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் அசுர வேகத்தில் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















