Vijay66 Update: விஜய்யுடன் இந்த ரோலில்இணைகிறாரா பிரபுதேவா? தளபதி 66 பத்தி ஒரு புது அப்டேட்..
படத்தின் ஓப்பனிங் பாடலான போக்கிரி பொங்கலில் விஜய்யுடன் பிரபுதேவா சில நிமிடங்கள் ஆடிய நடனம் இன்றுவரை பலரையும் கட்டிப்போட கூடியது.
இந்திய அளவில் மிகச்சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவா. இவர் அமைக்கு நடனங்களுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். பிரபுதேவா நடன அமைப்பாளர் மட்டுமின்றி நடிகரும்கூட. அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில் இவர் முதல்முதலில் விஜய்யை வைத்து 2007ஆம் ஆண்டு போக்கிரி படத்தை இயக்கினார். இந்தப் படம் பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக உருவானதால் படம் பெரும் வெற்றி பெற்றது.
படத்தின் ஓப்பனிங் பாடலான போக்கிரி பொங்கலில் விஜய்யுடன் பிரபுதேவா சில நிமிடங்கள் ஆடிய நடனம் இன்றுவரை பலரையும் கட்டிப்போட கூடியது.
போக்கிரி வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து அவர் வில்லு படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து அவர் விஷாலை வைத்து வெடி படத்தை இயக்கினார். அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இவர் தமிழில் கடைசியாக ஜெயம் ரவியை வைத்து எங்கேயும் காதல் படத்தை இயக்கியிருந்தார்.
தொடர்ந்து போக்கிரி படத்தை ஹிந்தியில் சல்மான் கானை வைத்து வான்டட் படத்தை ரீமேக் செய்தார். அப்படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. மேலும் ஹிந்தியில் அவர் இயக்கிய ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் ஹிட் அடித்ததால் பாலிவுட்டின் வான்டட் இயக்குநரானார் பிரபுதேவா.
இதற்கிடையே தமிழில் அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், வம்சியுடன் நடிகர் விஜய் இணையும் படத்தில் நடனம் அமைப்பதற்கு பிரபுதேவாவுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மிகச்சிறப்பாக நடனமாடுபவர் என்பதால் பிரபுதேவா நடனம் அமைத்தால் அது வேறு லெவலில் இருக்கும் எனவும் இந்த காம்போவுக்காக காத்திருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: "We stand with surya" : சூர்யாவுக்கு ஆதரவாக நிற்கும் இயக்குநர் ரஞ்சித்..