"We stand with surya" : சூர்யாவுக்கு ஆதரவாக நிற்கும் இயக்குநர் ரஞ்சித்..
இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் புகைப்படத்தை பகிர்ந்து We stand with surya என பதிவிட்டுள்ளார்.
ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜெய் பீம். ராஜாக்கண்ணு என்பவரை காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அடித்தே கொன்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படத்தை பல்வேறு தரப்பினர் கொண்டாடிவருகின்றனர்.
அதேசமயம் ஜெய் பீம் படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்திவிட்டதாகவும், இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் எனவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அன்புமணியின் கடிதம் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும், அவர் வன்னிய சமுதாய இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.
இதனையடுத்து, படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’ என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன்.
அதேபோல ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்” என சூர்யா அன்புமணி ராமதாஸுக்கு பதில் எழுதியிருந்தார்.
சூழல் இப்படி இருக்க வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்திய சூர்யா, ஜோதிகா, அமேசான் நிறுவன சிஇஓ ஆகியோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
#jaibhim #weStandwithSurya pic.twitter.com/n70PuWmLyN
— pa.ranjith (@beemji) November 15, 2021
இதனையடுத்து ட்விட்டரில், We stand with surya என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் புகைப்படத்தை பகிர்ந்து We stand with surya என பதிவிட்டுள்ளார். பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்
முன்னதாக, மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் படம் திரையிடப்பட்டபோதுஅதை பாமகவினர் தடுத்து நிறுத்தினர். மேலும், சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுமெனவும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: நானும் இருளர்களும்... இது அதிகாரத்துவத்தின் ஜெய் பீம் - கரூர் மாவட்ட ஆட்சியரின் பதிவு
Watch video | கெத்தா.. மாஸா.. வைரலாகும் ‘ஜெய் பீம்' சீன்...
Jai Bhim Movie: ஜெய் பீம் படத்தின் சாதனை.... ஐஎம்டிபியில் முதலிடம் பிடித்தது!