Thalaivar 169 Update: ‘தலைவர் 169’ படத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் இயக்குநர்? எல்லா அப்டேட்ஸும் இங்கே..
'தலைவர் 169' படத்தில் சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
'தலைவர் 169' படத்திற்காக நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆவதால், இந்த வருடமே அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ‘தலைவர் 169’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
'தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கி 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் திரைக்கதை பணியில் ஈடுபட தனது நண்பரும், பிரபல இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமாரை ரஜினி நியமித்ததாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற கமர்ஷியல் திரைப்பட இயக்குநர், நெல்சனுடன் இணைந்தது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ‘பீஸ்ட்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால், நெல்சனை தனது அடுத்த படத்தில் இருந்து ரஜினி நீக்கியதாக கூறப்பட்ட நிலையில், அப்படி எல்லாம் கிடையாது நெல்சன் தான் இயக்குவார் என்று ரஜினியே உறுதிபட தெரிவித்தார். இதனால், ‘தலைவர் 169’ படம் உருவாவது கன்பார்ம் ஆன பிறகும், படத்தின் திரைக்கதை நன்றாக வரவேண்டும் என்பதற்காக நெல்சனுக்கு உதவியாக கே.எஸ்.ரவிக்குமார் கைகோர்த்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ரஜினிக்கு பல மாஸ் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்த அனுபவம் வாய்ந்த இயக்குநரின் பங்கு பெரியளவில் கைகொடுக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ரஜினியின் வாழ்க்கையில் 'முத்து', 'படையப்பா' உள்ளிட்ட சில மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் ஒரு பெரிய பட்ஜெட் காவியப் படமான 'ராணா' என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை எனப் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
'தலைவர் 169' படத்தில் சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் படிக்க: ரஜினி - லோகேஷ் கூட்டணி எப்போது? விக்ரம் படக்குழுவினர் ரஜினிகாந்துடன் நேரில் சந்திப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்