TEST Movie: மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம்.. இயக்குநராக அறிமுகமாகும் பிரபல தயாரிப்பாளர்..!
டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படத்தின் யார், யார் நடிக்கவுள்ளார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
நடிகர்கள் மாதவன், சித்தார்த், நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு சிவா, திஷா பாண்டே நடிப்பில் வெளியான “தமிழ் படம்” மூலம் தமிழ் சினிமாவில் YNOT ஸ்டுடியோ நிறுவனம் கால் பதித்தது. தொடர்ந்து வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும்,காவியத்தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, தமிழ் படம்-2 , கேம் ஓவர், ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம், கடசீல பிரியாணி, தலைக்கூத்தல் ஆகிய பல படங்களை தயாரித்தார். மேலும் மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை விநியோகிப்பதிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
முன்னதாக சென்னையை சேர்ந்த சஷிகாந்த், உதவி கலை இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார். அதன்மூலம் ஏற்பட்ட திரையுலக பிரபலங்களின் தொடர்பின் மூலம் YNOT ஸ்டுடியோஸ் நிறுவனத்தையும் தொடங்கி படத் தயாரிப்பிலும் ஈடுபட்டார். இதற்கிடையில் இந்நிறுவனத்தின் உரிமையாளரான சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார். டெஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது.
இந்த படத்தின் நடிகர்கள் மாதவன், சித்தார்த்த், நடிகை நயன்தாரா ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடிக்கின்றனர். 3 பேரும் ஒன்றாக இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். அதேசமயம் ஆயுத எழுத்து மற்றும் ரங் தே பசந்தி என்ற இந்தி படத்திற்கு பிறகு மாதவன் மற்றும் சித்தார்த் இருவரும் நடிக்கும் 3வது படமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும் நடிகை ராஷி கண்ணா முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மோஷன் போஸ்டரில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் யாரோ ஒருவர் பந்தை அடிப்பது போன்றும், ரசிகர்களின் ஆரவார சத்தங்களும் இருப்பது போன்ற பிண்ணனியில் மாதவன் , நயன்தாரா , சித்தார்த் ஆகியோரின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படத்தின் யார், யார் நடிக்கவுள்ளார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிவர இருக்கும் மற்ற படங்கள்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக இந்தியின் ஜவான் படம் வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடிக்கிறார். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற படத்திலும், நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படத்திலும் நயன்தாரா அவர் நடித்து வருகிறார்.
அதேபோல் மாதவன் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. மறுபக்கம் சித்தார்த் இந்தியன் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.