Seetha Raman: பயத்தை காட்டிய சீதா.. உண்மையை உடைத்த மந்திரவாதி.. சீதா ராமன் எபிசோட் அப்டேட்
சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவுக்கு பைத்தியம் பிடித்து விட வீட்டுக்கு வந்த மந்திரவாதி நான்கு நாளைக்கு அப்படி தான் இருக்கும் என்று ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதவாது மந்திரவாதி மையால் வந்த பிரச்சனை என்று சொன்னதை கேட்டு சீதாவுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் சாமி வந்தது போல் நடிக்க தொடங்க மந்திரவாதிக்கு அம்மன் நடந்து வருவது போலவே காட்சி தெரிய அவர் மிரண்டு நிற்கிறார்.
அருகே வந்த சீதா உண்மையை சொல்லு என்ன நடந்துச்சு என்று கேட்க இந்த வீட்டில இருக்கிறவங்க தான் காரணம் என்று உண்மையை உடைக்க சீதாவுக்கு இதெல்லாம் மகாவின் வேலை தான் என்பது உறுதியாகிறது. அதன் பிறகு அர்ச்சனா கண் விழிக்க அவள் செய்த வேலைகளை சொல்ல நானா அப்படி நடந்துக்கிட்டேன் என்று ஷாக் ஆகிறாள். யாரும் இல்லாத நேரத்தில் மகா அர்ச்சனாவிடம் நீங்க எதுக்கு அந்த மையை வச்சிக்கிட்டீங்க என்று கேள்வி கேட்கிறாள்.
அதன் பிறகு கண்ணாடியில் தன்னுடைய முகத்தை பார்த்து அர்ச்சனாவே பயப்படுகிறாள். இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு அனைத்து விஷயமும் அறிந்து ராஜசேகர் உச்சகட்ட கோபத்துடன் மகா வீட்டிற்கு வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய சீதா ராமன் சீரியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
India Maldives Explained: உதவி செய்த நண்பனுக்கே ஆப்பு வைத்த மாலத்தீவு - பாடம் புகட்டுமா இந்தியா?