Karthigai Deepam: புதையலை கடத்திய முத்துவேல்.. சாமுண்டீஸ்வரி மீது பழிபோட சதி - கார்த்திகை தீபத்தில் இன்று
சாமுண்டீஸ்வரி வீட்டில் இருந்து புதையல் நகைகளை கடத்திய நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் டீ கடைக்கு சென்றிருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கடத்தப்பட்ட தங்க நகைகள்:
அதாவது, டீ கடைக்கு சென்ற ராஜராஜன் டீ-யை குடித்து விட்டு மயங்கி விழ அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். உடனே இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வர அனைவரும் பதறி போய் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் நுழையும் முத்துவேல் சந்திரகலாவின் உதவியுடன் புதையலாக கிடைத்த தங்க நகைகளை கடத்தி செல்கிறான்.
அடுத்து நடக்கப்போவது என்ன?
சந்திரகலா சாமுண்டீஸ்வரிக்கு எதிராக தொடர்ந்து சதி செய்து வரும் நிலையில், சிவனாண்டி தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை அழிக்க திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில், கடத்தப்பட்ட நகைகள் திருடியதாக சாமுண்டீஸ்வரி மீது பழிபோட சிவனாண்டி திட்டமிட்டு வருகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக் இந்த சிக்கலை கையாளப்போவது எப்படி என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























