Parijatham Serial: வேறு பெண்ணை காதலிப்பதாக சொல்லும் விஷால்.. கேட்க முடியாத இசை - பாரிஜாதத்தில் மீண்டும் ட்விஸ்ட்!
பாரிஜாதம் சீரியலில் விஷால் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறும் நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
விஷால் பேசுவதை கேட்காத இசை:
அதாவது விஷால் தனது நண்பர்களிடம் அவ்வளவு சொல்லியும் அவர் புடவை எடுக்க வந்திருக்காள் என்று இசை மீது கோபப்படுகிறான். பிறகு தொடர்ந்து இசை போன் கால் செய்ய இசை போனை கவனிக்காமல் இருக்கிறாள். அதன் பிறகு இசை விஷாலுக்கு வீடியோ கால் செய்ய விஷால் இவ முகத்தை வேற பார்த்து பேசணுமா? என்று போனை எடுக்க மறுக்கிறான்.
ஒரு கட்டத்தில் ஃபோனை எடுக்கும் விஷால் இசையை பேசவிடாமல் மீண்டும் ஸ்ரீஜாவை காதலிக்கும் விஷயத்தை சொல்கிறான். இசைக்கு இந்த முறையும் அவன் பேசுவது என்னவென்று கேட்காமல் போகிறது.
நம்பிய தேவகி:
அடுத்ததாக சிந்தாமணி பானுமதி உடன் சேர்ந்து ஒரு குறி சொல்லும் பெண்மணியை சந்தித்து ஏஐ குரலில் பார்த்திபன் பேசுவது போல ஏற்பாடு செய்து தேவகி பாட்டியை நம்ப வைக்க திட்டமிடுகின்றனர். அதன் பிறகு சிந்தாமணி பாட்டியை இங்கே குறி கேட்க அழைத்து வர பார்த்திபன் குரலில் என் பொண்டாட்டி பானுமதி பாவம் அம்மா, அவளை வீட்ல சேர்த்துக்கோங்க என்று சொல்ல வைக்கின்றனர். இதனை தேவகி பாட்டியும் நம்பி விடுகிறார்.
அதன் பிறகு தேவகி பாட்டி பானுமதி கோவிலில் சந்தித்து அந்த வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போறேன் என்று வாக்கு கொடுக்க இதை சுபத்ரா தேவியும் பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















