Karthigai Deepam: "என்னையும் என் கொழுந்தனையும் தப்பா பேசுறாங்க" ரேவதியிடம் நாடகம் போடும் மாயா!
கார்த்திக்கிடம் மாட்டிக்கொண்ட மாயா மருத்துவமனையில் சேர்ந்து நாடகம் ஆடும் நிலையில் கார்த்திகை தீபத்தில் இன்று நடப்பது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். இந்தத் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை, தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மயில்வாகனத்திற்கு கத்திக்குத்து விழுந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மாயா போடும் டிராமா:
அதாவது கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டில், கம்பி கிழித்து விட்டதாக பொய் சொல்லி சமாளித்து விடுகிறான். அடுத்ததாக, கார்த்திக் மகேஷ் வீட்டிற்கு வந்து பார்க்க, அங்கு வீட்டில் யாரும் இல்லை. அதன் பிறகு ரேவதிக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலில் மாயா ஹாஸ்பிடல் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாக சொல்ல ரேவதி அதிர்ச்சியாகி ஹாஸ்பிடல் கிளம்பி செல்கிறாள்.
ஹாஸ்பிடலில் மாயா தற்கொலைக்கு முயன்றதாக சொல்ல அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு மாயாவிடம் விசாரிக்க "என்னையும் என் கொழுந்தனையும் சேர்த்து வச்சு தப்பா பேசுறாங்க. அத என்னால ஏத்துக்க முடியல" அதனாலதான் இப்படி பண்ணதாக டிராமா போடுகிறாள்.
ராஜா சேதுபதியை சந்திக்கும் கார்த்திக்:
கார்த்திக் மாயா திட்டம் போட்டு தான் இப்படி செய்திருக்கிறாள். இப்போ எதுவும் சொல்ல முடியாது என மாயா, மகேஷ் கள்ளத்தொடர்பு குறித்த உண்மையை சொல்லாமல் அமைதியாகி விடுகிறான். இதைத்தொடர்ந்து கார்த்திக்கு தாத்தா ராஜா சேதுபதியிடம் இருந்து போன் கால் வருகிறது.
உடனே கார்த்தி மற்றும் மயில்வாகனம் என இருவரும் கிளம்பி ராஜா சேதுபதியை சந்திக்கச் செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

