EthirNeechal: எதிர்நீச்சல் சீரியலின் நேரம் திடீர் மாற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன காரணம்?
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் நேரமானது மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் நேரமானது மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தேவயானி முதன்மை கேரக்டரில் நடித்த கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். அந்த சீரியலில் அவர் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இப்படியான நிலையில் திருச்செல்வம் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலானது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் சீரியல்தான் தொடர்ந்து பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.
இந்த சீரியலில் கனிகா, ஹரிப்பிரியா இசை, மதுமிதா, கமலேஷ், சத்யப்பிரியா, விபு ராமன், சபரி பிரசாந்த், காயத்ரி கிருஷ்ணன், பிரியதர்ஷினி, பாம்பே ஞானம், விஜே விமல், சத்யா தேவராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் திருச்செல்வமும் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமாக காரணமே அதில் இடம் பெற்ற “ஆதி குணசேகரன்” கேரக்டர் தான். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த சீரியலில் ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தின் மூத்த நபராக அந்த கேரக்டர் வலம் வரும்.
View this post on Instagram
ஆதி குணசேகரனாக சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த இயக்குநர் ஜி. மாரிமுத்து நடித்து வந்தார்.அவரது மறைவுக்கு பிறகு அந்த கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கேற்றவாறு கடந்த 2 வாரங்களாகவே அந்த கேரக்டர் இல்லாமல் தான் கதையும், காட்சிகளும் நகர்ந்தது. இப்படியான நிலையில் ஒருவழியாக ஆதி குணசேகரன் கேரக்டரில் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளார். அவருடைய காட்சிகள் இந்த வாரத்தில் ஒளிபரப்பாக தொடங்குகிறது.
அதேசமயம் டிஆர்பி ரேட்டிங்கில் நல்லபடியாக சென்று கொண்டிருப்பதால் எதிர்நீச்சல் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் காலை 11 மணிக்கு ரிபீட் மோடில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எதிர்நீச்சல் சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில் திடீரென அந்த சீரியலின் நேரமானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் இந்த சீரியல் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் டைம் ஸ்லாட்டில் எதிர்நீச்சல் ஒளிபரப்பாகவுள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புது சீரியல் வரவு மற்றும் மிஸ்டர் மனைவி, அன்பே வா, இனியா சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Ethirneechal : மாட்டிக்கிட்ட தம்பி! கதிரை தேடி வீட்டுக்கு வந்த போலீஸ்... விசாலாட்சி அம்மா சொன்ன குட் நியூஸ்...