Ethirneechal: அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு.. ஜனனி மீது விழுந்து பழி... எதிர்நீச்சலில் பரபரப்பு!
Ethirneechal: பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கும் அப்பத்தாவை பார்த்து அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். காரணம் ஜனனி தான் என பழி சுமத்துகிறார் குணசேகரன்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தா தொடங்கி வைத்துள்ள பெண்களுக்கான டிரஸ்டின் மேனேஜிங் அதாரிட்டியை ஜீவானந்தம் கையில் ஒப்படைக்கிறார். மேலும் தனது 40% சொத்தை தனது பேரப்பிள்ளைகள் தர்ஷன், தர்ஷினி, ஐஸ்வர்யா, தாரா பெயரில் மட்டுமில்லாமல், ஜனனிக்கு பிறக்கப் போகும் பிள்ளைகள் பெயரிலும் சரிசமமாக எழுதி வைத்து விட்டதாகத் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட குணசேகரனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தனக்கு ஒன்றுமே இல்லை என ஜான்சி ராணியும் நொந்து கொள்கிறாள்.
குணசேகரனுக்கு குறிவைக்கும் கெளதம்:
தர்ஷனை தவிர மற்றவர்கள் அனைவரும் மேஜராகும் வரை அந்த சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களின் அம்மாக்களை சேரும். ஆனால் அவர்கள் பாதுகாக்க மட்டுமே முடியும், அதை யார் பெயரில் எழுதி வைக்கவோ அனுபவிக்கவோ முடியாது எனத் தெளிவாக சொல்லிவிடுகிறார் அப்பத்தா. பின்னர் விழாவுக்கு வந்து இருக்கும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களுக்கும் அன்பளிப்பை ஆதிரை, கதிர் மற்றும் ஞானத்தை அழைத்து கொடுக்கச் சொல்கிறார். பின்னர் ஜீவானந்தத்திற்கு அன்புப்பரிசை குணசேகரனை கொடுக்க சொல்கிறார். அவரும் மேடையில் ஏறி கொடுக்கவே அங்கே கௌதம் குணசேகரனை துப்பாக்கியால் குறி வைக்கிறான்.
அதே சமயத்தில் ஜீவானந்தத்தைக் குறி வைக்க குணசேகரன் ஏற்பாடு செய்த நபர் பத்திரிகையாளன் போல மேடையின் முன்னால் போய் நின்று துப்பாக்கியை எடுக்கிறான். அதைப் பார்த்த கெளதம் குணசேகரனுக்கு பதிலாக அந்த ஆளை சுட்டு விடுகிறான். அதைப் பார்த்து அங்கே கூடி இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்பத்தா தான் இந்த வேலையை செய்து இருப்பார் என அவரின் கழுத்தை நெரிக்கிறான் கதிர்.
கௌதம் அங்கிருந்து எப்படியோ தப்பி விடுகிறான். ஜீவானந்தத்திற்கு போன் செய்து அவரிடம் உடனே பேச வேண்டும் என வரச் சொல்கிறான். குணசேகரன் வீட்டில் பெரிய பிரச்சினையே நடக்கிறது. அனைத்திற்கும் காரணம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் என விசாலாட்சி அம்மா திட்ட, சக்தி ஜீவானந்தத்தின் மனைவியின் கொலை பற்றி சொல்ல வாய் எடுக்கிறான். ஆனால் அவனை ஜனனியும் ஈஸ்வரியும் சேர்ந்து தடுத்து விடுகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விசாலாட்சி அம்மா நடுஹாலில் உட்கார்ந்து அழுது புலம்பி கொண்டு இருக்கிறார். அப்பத்தா சொத்து பிரித்து எழுதியது பற்றி அவரிடம் சொன்னதும் "இந்தா இவளுங்க இருக்காளுங்களே அவள்களின் ஆட்டத்தை இனி யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது" என கதிரிடம் புலம்புகிறார். அதைப் பார்த்து குணசேகரன் சங்கடப்படுகிறார். வீட்டுப் பெண்களும் அவர்கள் பேசுவதைக் கேட்டு மனசு சங்கடப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ரூமில் அப்பத்தா படுத்துக்கொண்டு இருக்கிறார். ஜனனி சென்று அப்பத்தாவை எழுப்ப, அவர் எழவில்லை என்பதால் பதட்டமான ஜனனி, அனைவரையும் கூப்பிட, அனைவரும் அப்பத்தாவை எழுப்ப முயற்சி செய்கிறார்கள். அப்பவும் அப்பத்தா கண் முழிக்கவில்லை என்பதால் வேகவேகமாக காருக்கு தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்.
அனைவரையும் தள்ளி விட்ட குணசேகரன் ஜனனியைப் பார்த்து "கிழவி இப்படி ஆனதற்கு காரணமே நீ தான்" என மிரட்டி அப்பத்தாவை குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் அழைத்து செல்கிறார்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் அப்பத்தாவுக்கு என்ன ஆனது என அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.