Siragadikka Aasai Serial: காரைப் பறித்த போலீஸ்.. முத்துவை அடித்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசையில் இன்று!
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Siragadikka Aasai Serial : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
சீதா சத்யா காட்டிய முத்துவின் வீடியோவைp பார்த்து விட்டு ”என்னக்கா மாமா குடிச்சிட்டு கார் ஓட்டிக்கிட்டு போறாரு?” என்று கேட்கிறார். அதற்கு சத்யா மீனாவை பார்த்து ”எனக்கு ஏதோ அட்வைஸ் பண்ண? சிட்டிய குடிகாரன்னுலாம் சொன்ன?” என்று கிண்டலாக சொல்வதுடன் ”ஊரே சேர்ந்து காரி துப்புது” என்றும் சொல்கிறார். ”அவருக்குப் போய் அக்காவை கல்யாணம் பண்ணி வச்சியேமா” என்று சத்யா சொல்கிறார். ”அக்கா இப்போ சொல்லுக்கா மாமாவை விட சிட்டி பராவயில்ல தானே” என்று கேட்கிறார்.
முத்து தனது காரில் கஸ்டமரை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த கஸ்டமர் முத்துவின் வீடியோவைப் பார்த்து விட்டு காரை நிறுத்த சொல்லி பாதியில் இறங்கி விடுகிறார். இணையத்தில் பரவி வரும் முத்துவின் வீடியோவை மனோஜ் வீட்டில் உள்ள அனைவருக்கும் போட்டுக் காண்பிக்கின்றார். ”எல்லா சோஷியல் மீடியாவுலயும் இதான் டாபிக்கா ஓடிக்கிட்டு இருக்கு” என்று ஸ்ருதி சொல்கிறார். ரோகிணியும் மனோஜூம் சந்தோஷப்படுகின்றனர்.
இந்த மாதிரி செய்யுறவங்களால தான் நிறைய ஆக்ஸிடெண்ட் எல்லாம் நடக்குது” என ரோகிணி சொல்கிறார். ஸ்ருதியின் அப்பா தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிக்கு வீடியோவை அனுப்பி இனி அவன் காரே ஓட்டாதவாறு ஆக்ஷன் எடுக்குமாறு சொல்கிறார். போலீஸ் முத்துவின் காரை மடக்கிப் பிடித்து காரை முத்துவிடம் இருந்து பறிமுதல் செய்கின்றனர். முத்து ”சார், சார்.. நான் குடிக்கல சார், வேணும்னா என்னை சோதனை பண்ணிப் பாருங்க” என போலீஸிடம் கெஞ்சுகிறார். ஆனால் முத்து சொல்வதை அவர்கள் காது கொடுத்து கேட்கவே இல்லை.
முத்து வீட்டுக்குள் நுழைந்ததும், ”என் மரியாதைய கெடுக்குற மாதிரி என்னைக்கும் அவன் நடந்துக்க மாட்டான்னு எல்லார்கிட்டயும் சொன்னேன்” என்று அண்ணாமலை முத்துவைப் பார்த்து சொல்கிறார். உடனே முத்து கோபப்பட்டு சொல்லிட்ட இல்ல என்று மனோஜை அடிக்க கை ஓங்குகிறார். அப்போது அண்ணாமலை ”குடிச்சதும் இல்லாம ரவுடித்தனமா பண்ற?” என சொல்லி முத்துவை கன்னத்திலேயே அடித்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க
HBD Trisha: “அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே” - நடிகை திரிஷா பிறந்தநாள் இன்று!