பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை - யார் தெரியுமா?
ஹீரோயின் ஆசையில் ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டதாக, சிறகடிக்க ஆசை சீரியலின் நடித்து வரும் நடிகை கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை பாக்யஸ்ரீ என்ற பாக்கியலட்சுமி. 1982 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இவர் தேவியின் திருவிளையாடல் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதே போன்று ஆஸ்ரம் என்ற படம் மூலமாக மலையாளத்திலும் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்த பாக்யஸ்ரீ, தமிழில் நியாயம் கேட்கிறேன், நலமறிய ஆவல், சாந்தி முகூர்த்தம், செயின் ஜெயபால், வளையல் சத்தம், கொடி பறக்கது, ஒரே ரத்தம், தாயா தாரமா, சக்தி பராசக்தி, சின்ன கண்ணம்மா, சின்ன வாத்தியார் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 60க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வாசுதேவன் மன்னடியாரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு கொஞ்ச காலம் பிரேக் கொடுத்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தர்மபத்தினி என்ற படத்தில் நடித்தார். சினிமாவில் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கல்யாண பரிசு, கைராசி குடும்பம், அபூர்வ ராகங்கள், அழகு, நீலகுயில், கல்யாண வீடு போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது சிறகடிக்க ஆசை மற்றும் லட்சுமி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தனது சினிமா அனுபவம் பற்றி பாக்யஸ்ரீ (பாக்கியலட்சுமி) பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனது கணவர் இறந்த 3 மாதத்திற்கு பிறகு சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியல் தான் தன்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது. செட்டில் நாங்கள் எல்லோருமே ஒரே ஃபேமிலி தான். இந்த சீரியலில் முத்து மற்றும் மீனாவின் காம்பினேஷன் ரொம்ப சூப்பராக இருக்கும். அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நான் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். அதே போல் தங்கை ரோலிலும் நடித்திருக்கிறேன். ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, ராஜேஷ், முரளி பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். நடிக்க வந்த போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். இதன் காரணமாகவே நான் ஹீரோயினாக நடிக்க வேண்டிய படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது.
காரணம் அப்போதெல்லம், இப்போது இருக்கும் ஹீரோயின்கள் போல் மிகவும் ஒல்லியாக இருக்க கூடாது. கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் வாய்ப்பு கொடுப்பார்கள். எனவே நானும் குண்டாக வேண்டும் என சிலர் சொல்லி ஹார்மோன் ஊசி போட்டு கொண்டேன். ஆனால் டாக்டர் இதனால் சில பின் விளைவுகள் வரும் என சொல்லியும் நான் தான் போட்டு கொண்டேன். இப்பொது என்னால் என்னுடைய எடையை குறைக்கமுடியவில்லை. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேர்கிறது என கூறியுள்ளார்.

