Seetha Raman: அர்ச்சனா, சுபாஷூக்கு வந்த மிரட்டல்: ஜெயிலுக்குள் அடைக்கப்படும் சீதா: சீதா ராமன் இன்று!
ஜெயிலுக்குள் சீதா சாப்பிடாமல் இருக்க, அந்த விஷயம் அறியும் ராம் “உனக்காக இல்லனாலும் குழந்தைக்காக சாப்பிடு” என்று சொல்கிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவை கைது செய்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ராம் சீதாவை கைது செய்து அழைத்துச் செல்ல அனைவரும் அதிர்ச்சியடைய, உமா மயங்கி விழுகிறாள். அதன் தொடர்ச்சியாக ராம் சீதாவை ஜெயிலுக்குள் அடைக்க சீதா ராமுடனான நினைவுகளை நினைத்து பார்க்கிறாள். அதே போல் ராம் சீதா தனக்காக போலீஸ் ட்ரஸ் தைத்துக் கொடுத்தது, தனது கனவை அவளது கனவாக நினைத்தது போன்றவற்றை நினைத்துப் பார்த்து அவளையே கைது செய்ய வேண்டியதாகி விட்டது என வருந்துகிறான்.
“வீட்டில் அர்ச்சனா சீதாவா மகாவை கொன்னா அப்படினா கல்பனா எதுக்கு பணத்தைக் கேட்கிறாள்” எனக் குழப்பத்தில் இருக்க, கல்பனா போன் செய்து பணத்தை கேட்டு மிரட்டுகிறாள். “இப்போ மகாவும் இல்ல, அந்த சீதாவும் போய்ட்டா, அப்புறம் என்ன? பணத்தை சீக்கிரமா அனுப்பு. நான் எனக்கு ஒன்னும் கேட்கல” என்று சொல்கிறாள்.
அதே போல் சுபாஷ் ரவுடிக்கு போன் செய்து “மகாவை நீ கொல்லலயா?” என்று கேட்க, அவன் “நான் தான் கொன்னேன்” என்று பணத்தை கேட்டு மிரட்ட இருவரும் குழப்பம் அடைகின்றனர். ஸ்டேஷனலில் ராமை போலீஸ் அதிகாரி ஒருவர் “உங்க கடமையை சரியா செய்திருக்கீங்க” என்று பாராட்ட சேது, துரை, சத்யன், சீதாவின் அப்பா ராஜசேகர் ஆகியோர் வந்து “சீதா தப்பே பண்ணல” என்று சொல்ல, ஆதாரங்கள் எல்லாம் சீதாவுக்கு எதிராக தான் இருப்பதாக சொல்கிறான் ராம்.
சீதாவை ஜாமினில் வெளியே எடுப்போம் என்று சொல்ல, ராம் “ஒரு போதும் நான் அதை செய்ய விட மாட்டேன்” என்று அதிர்ச்சி கொடுக்கிறான். ஜெயிலுக்குள் சீதா சாப்பிடாமல் இருக்க, அந்த விஷயம் அறியும் ராம் “உனக்காக இல்லனாலும் குழந்தைக்காக சாப்பிடு” என்று சொல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: A R Rahman : பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது.. ஆறுதலால் ராஜா குடும்பத்தை தேற்றும் ரஹ்மான்