Seetha Raman: சீதாவுக்கு வீசிய வலையில் சிக்கிய அர்ச்சனா! மகாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
மந்திரவாதி கொடுத்த மை:
இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மகாலட்சுமி சீதாவுடைய கண் மையில் மந்திரவாதி கொடுத்த மையை கலந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, மகாலட்சுமி சேதுவிடம் நான் இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் எல்லாரும் சேர்ந்து வெளிய லஞ்ச் போகலாம் என்று சொன்ன சேதுவும் ஓகே சொல்கிறார்.
பிறகு அர்ச்சனா, கல்பனா, சுபாஷ் ஆகியோர் காபி குடித்துக் கொண்டிருக்க சீதாவோட அம்மா சம்பளம் இல்லாத வேலைக்காரிய வீட்டுக்கு வந்து இருக்கா நல்லா டேஸ்டா சமைக்கிறாங்க என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
அப்போது சமையல்காரர், செல்வி மகா அம்மா அங்க எல்லாரும் ரெடியாக சொன்னாங்க சாப்பிட ஹோட்டலுக்கு போக போறதா சொன்னாங்க என்று சொல்லிவிட்டு போக கல்பனா ஹோட்டலில் சாப்பாட்டில் அபார்ஷன் மருந்தை கலந்து சீதாவின் கர்ப்பத்தை கலைக்கலாம் என்று பிளான் போட அர்ச்சனா சூப்பர் ஐடியா என சந்தோஷப்படுகிறார்.
அதிர்ச்சி:
அதன் பிறகு சீதாவின் ரூமுக்கு வந்து ஹோட்டலுக்கு போகலாம் என்று சொல்லி அழைக்கின்றனர். கண் மையில் மந்திரவாதி கொடுத்த மையை கலக்கிய போது மகா தவறிவிட்ட கத்தி இருக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். சீதாவின் அம்மாவிடம் இன்னொரு காபி கிடைக்குமா என்று சொல்லி அனுப்பி சீதாவையும் உதவிக்கு போகுமாறு அனுப்பி வைத்து யாருக்கும் தெரியாமல் அந்த கத்தியை எடுத்து விடுகிறார்.
பிறகு துரை மகாலட்சுமி இப்படியெல்லாம் பண்ண மாட்டாளே ஏதோ தப்பா இருக்கு என்று சந்தேகப்பட சேது அவரை திட்டி விடுகிறார். அடுத்ததாக சீதா கையில் மையை வைத்துக்கொண்டு ராமிடம் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிற அவரது அம்மா விபூதி வைத்த போது அது கண்ணில் பட்டு கண்ணெறிய சீதா கையில் இருந்த மையை தவறவிட அது உருண்டு ஓடி அர்ச்சனாவின் காலடியில் விழுகிறது.
மகாலட்சுமிக்கு சந்தோஷம்:
அர்ச்சனா அந்த மையை மறைத்து ரூமுக்குள் எடுத்து வந்து தனக்கு போட்டு அழகு பார்க்க ஏதோ தலை சுற்றுவது போல் தோன்றுகிறது. பிபி இருக்கும்னு நினைக்கிறேன் என்று அவரே பேசிக்கொள்கிறார். சீதா வேற மை டப்பா எடுத்து கண்ணுக்கு மை போட அதைப் பார்த்த மகாலட்சுமி இன்னைக்கு நீ பைத்தியம் பிடித்து வீட்டை விட்டு ஓட போற சந்தோஷமா இருக்கு என நினைத்துக் கொள்கிறார்.
மேலும் சீத்தாவிடம் அன்பாக பேச சீதா நான் விருப்ப ஒரு ஆள் நீங்கதான் ஆனா இப்போ நீங்களே இப்படி மாறியது பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு என பேசுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.