Pandian Store 2: ரூ.10 லட்சம் பணம் எங்கே போச்சு? உண்மையை உடைத்த செந்தில் - நழுவிய மீனா! பாண்டியன் ஸ்டோர் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 514ஆவது எபிசோடில், செந்தில் அதிர்ச்சியாகும்படியான விஷயம் தான் நடந்துள்ளது. அது பற்றி பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 514ஆவது எபிசோடானது கதிர் மற்றும் ராஜீயின் காட்சிகளுடன் தொடங்குகிறது. இதில், நீயும் நானும் கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கதிர் சொல்வதை கேட்டு ராஜீ ஹேப்பியானார். இதெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பாண்டியனின் அக்காவும் அவரது கணவரும் வருகிறார்கள்.
அவர்களுக்கு டீ, சாப்பாடு வேண்டுமா என்று கோமதி கேட்க, அதெல்லாம் எங்க வீட்டில் இல்லாமலா நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்று பாண்டியனின் அக்கா கூறுவதை கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த பாண்டியன் பாதியிலேயே எழுந்துவிடுகிறார். பின்னர் பாண்டியனின் அக்காவும் - மாமாவும் திருமண ஏற்பாடு மற்றும் நிச்சயதார்த்த ஏற்பாடுகளுக்கு என்று எல்லா செலவையும் நாங்கள்தான் பார்த்தோம். மண்டபம், துணிமணிகள், வீடியோ, போட்டோ என்று எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாக ரூ.10 லட்சம் வந்துவிட்டது. எல்லா செல்வையும் நீ பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, இப்போது ஒரு செலவையும் செய்யவில்லை. எங்களுக்கு ரூ.10 லட்சம் செலவாகிவிட்டது. அதை கேட்க தான் இப்போது இங்கு வந்திருக்கிறோம் என கூறுகிறார்கள்.

உன்னுடைய மகள் அரசி காதலிப்பது தெரிந்து தான் இந்த கல்யாணத்திற்கு நீ ஏற்பாடு செஞ்ச. இப்போது அதைப்பற்றி நாங்கள் பேசவில்லை. எங்களால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. உங்களுகு மானம், மரியாதையை பற்றி என்ன தெரியும் என்று வாயிக்கு வந்த எல்லாவற்றையும் பேசுகிறார்கள். கடைசியில் எங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதை வாங்க தான் இங்கு வந்திருக்கிறோம் என்று கூற, பாண்டியன் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது போல், ரூ.10 லட்சம் ரெடி பண்ணிவிட்டு சொல்லு நாங்கள் வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.
பாண்டியனும் செந்திலிடம் பேங்கில் போட்ட ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அக்கா - மாமாவிடம் கொடுத்து விடு என கூறுகிறார். அதைக் கேட்டு செந்திலுக்கு ஒரே அதிர்ச்சி. அரசு வேலை கிடைக்க ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு மீனாவின் அப்பாவிடம் கொடுத்துவிட்டார். அப்படியிருக்கும் போது எப்படி அவரால் வங்கியிலிருந்து ரூ.10 லட்சம் எடுத்துக் கொண்டு வர முடியும். ரூ.10 லட்சம் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் செந்தில் யோசித்துக் கொண்டிருக்கும் போது மீனாவும் தனக்கு எதுவும் தெரியாது என்று நழுவிக் கொண்டார். வேறு வழியில்லாமல் எல்லாவற்றையும் கதிரிடம் கூறிவிட்டார் செந்தில்.
இப்போது செந்திலுக்கு யாரால் உதவி செய்ய முடியும் என்ற கேள்வியும், ரூ.10 லட்சத்திற்கு என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் ரூ 10 லட்சம் பணத்தால் அடுத்து என்ன பூகம்பம் வெடிக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.





















