மேலும் அறிய

Metti oli Uma Maheshwari: 40 வயதில் முடிந்த பயணம்.. மெட்டி ஒலி ‘விஜி' உமா மகேஸ்வரியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்!

Uma Maheshwari: மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரியின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

சன் டிவியில் 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை சின்னத்திரை ரசிகர்களை அரை மணி நேரத்திற்கு கட்டி போட்டு வைத்த ஒரு சீரியல் தான் 'மெட்டி ஒலி'. இயக்குநர் திருமுருகன் இயக்கி நடித்த இந்தத் தொடர் இன்று வரை மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு தொடர். ஒரு தந்தை தனியாக இருந்து ஐந்து பெண் பிள்ளைககளை எப்படி வளர்த்து ஆளாக்கி அவர்களை திருமணம் செய்து வைத்து, அவர்களின் குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைத்து, குடும்ப ஒற்றுமைக்காக போராடுகிறார் என்ற கதைக்களத்தை மிகவும் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குநர் திருமுருகன்! 

 

Metti oli Uma Maheshwari: 40 வயதில் முடிந்த பயணம்.. மெட்டி ஒலி ‘விஜி' உமா மகேஸ்வரியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்!
ஐந்து சகோதரிகளின் கதை :

இந்த சீரியலில் ஐந்து சகோதரிகளாக காவேரி, காயத்ரி, வனஜா, உமா மற்றும் ரேவதி பிரியா நடித்திருந்தார்கள். அவர்களின் இயற்பெயர் மறந்து போகும் அளவிற்கு தனம், சரோ, லீலா, விஜி, பவானி என மெட்டி ஒலி சீரியலின் கதாபாத்திரங்களாகவே இன்று வரை அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு பிரபலமானது மெட்டி ஒலி சீரியல். 

விஜியாக நடித்த உமா :

மெட்டி ஒலி சீரியலில் நான்காவது மகளாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. அதே சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்த வனஜாவும் உமாவும் உண்மையிலேயே உடன் பிறந்த சகோதரிகள். மஞ்சள் மகிமை, ஒரு கதையின் கதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும்  'ஈ பார்கவி நிலையம்' என்ற மலையாள திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார் உமா மகேஸ்வரி. 13 ஆண்டுகளாக மீடியாவில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வந்த உமா திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகினார். 

சொந்தமாக  'ஸ்ரீ சாய் பொட்டிக்' என்ற பொட்டிக் ஷாப் நடத்தி வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் போட்டியான 'கிச்சன் சூப்பர் ஸ்டார்'  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சமைக்கும் திறனை வெளிப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜியை மீண்டும் திரையில் பார்த்ததில் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர்.  

 

Metti oli Uma Maheshwari: 40 வயதில் முடிந்த பயணம்.. மெட்டி ஒலி ‘விஜி' உமா மகேஸ்வரியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்!

 

உடல்நல குறைவு :

ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமாவுக்கு ஈரோட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2021ம் ஆனது அக்டோபர் 17ம் தேதி உயிரிழந்தார். 40 வயதிலேயே அவர் காலமானது அவரின் குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :

உமாவின் இறப்புக்கு பிறகு பல வதந்திகள் பரவி வந்த நிலையில் அவருக்கு மஞ்சள் காமாலை வந்து பின்னர் அது சரியான பிறகு ஏதோ ஹெல்த் பிரச்சினை ஏற்பட்டது. அவள் உடலும் ட்ரீட்மென்ட்டுக்கு ஒத்துப்போகவில்லை என தெளிவுபடுத்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் உமாவின் சகோதரியும் நடிகையுமான வனஜா. 

உமாவின் மனக்கவலை :

“உமா என்றுமே வெளிப்படையாக விஷயங்களை ஷேர் செய்து கொள்பவர் அல்ல. அவருக்கு டிராவல் செய்வது, விதவிதமா உணவுகளை ட்ரை செய்வது எல்லாம் மிகவும் பிடிக்கும். மிகவும் ரசனையானவர். அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தனக்கு ஒரு குழந்தை இல்லை என்பது தான் மிகுந்த மனவேதனையை அவருக்குக் கொடுத்தது” என உமாவின் சகோதரி பகிர்ந்து இருந்தார்.

வாய்ப்புகள் கிடைத்தால் மீண்டும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட உமா, அவரின் பயணத்தை விரைவிலேயே முடித்து கொண்டார். ஆனால் அன்றும் இன்றும் என்றும் மெட்டி ஒலி விஜியாகவே ரசிகர்கள் நெஞ்சங்களில் இருப்பார்! 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Embed widget