![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Karthigai Deepam: ரியாவுடன் வந்து நின்ற ஆனந்த், அறைந்த அபிராமி, மீனாட்சி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: ஆனந்த் ரியாவை உள்ளே கூப்பிட்டு நானும் இவ்வளவு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்ற உண்மையை உடைக்க, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
![Karthigai Deepam: ரியாவுடன் வந்து நின்ற ஆனந்த், அறைந்த அபிராமி, மீனாட்சி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட் karthigai deepam serial today march 22nd written update Karthigai Deepam: ரியாவுடன் வந்து நின்ற ஆனந்த், அறைந்த அபிராமி, மீனாட்சி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/22/3fd4075e08c473c4109dfa8d4ec4612d1711107136862574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி கல்யாண நாளைக் கொண்டாட எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க, கேக் கட் பண்ணும் நேரத்தில் ஆனந்த் ரியாவை உள்ளே அழைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது ஆனந்த் ரியாவை உள்ளே கூப்பிட்டு நானும் இவ்வளவு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்ற உண்மையை உடைக்க, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். உச்சகட்ட டென்ஷனில் அபிராமி ஆனந்தைப் பிடித்து “உன்னையே நம்பி இருக்கவனுக்கு எப்படி துரோகம் பண்ண?” என பளார் பளார் என அறைகிறாள்.
ஆனந்த் “எனக்கு ஆரம்பத்தில் இருந்து மீனாட்சி சுத்தமா பிடிக்கல, நீங்கதான் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சீங்க. காலேஜ் படிக்கும் போதிலிருந்தே நானும் ரியாவும் காதலிச்சோம். நீங்க கட்டாயப்படுத்தவே தான் அந்த குழந்தையும் பெத்துக்கிட்டோம். இந்த விஷயத்துல என்ன கேள்வி கேட்க உங்க யாருக்கும் தகுதியும் கிடையாது, உரிமையை கிடையாது. மீனாட்சி தான் பேசணும்.. அவ பேசட்டும், நான் அவகிட்ட பேசிக்கிறேன்” என ஆனந்த் பதிலடி தருகிறான்.
இதையெல்லாம் கேட்டு மீனாட்சி அப்படியே உடைந்து போய் படிக்கட்டில் உட்கார, ஆனந்த் அவளிடம் பேசப்போக கோபத்தில் கொந்தளிக்கும் மீனாட்சி, ஒரு கட்டத்தில் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி ஆனந்த் முகத்தில் வீசி எறிகிறாள். இப்படியான பரபரப்பான கட்டத்தில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Padai Thalaivan: சொன்னபடியே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ்: படை தலைவன் அப்டேட்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)