மேலும் அறிய

Ethirneechal serial: ஞானம் இப்படிப்பட்டவனா? உண்மையை உடைத்த கரிகாலன்: எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal serial : குணசேகரன் வீட்டுக்குள் நுழைந்த கரிகாலன் ஞானம் பற்றி குடும்பத்திற்கு கொடுத்த ஷாக்... இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 13) எபிசோடில் நந்தினியின் அப்பாவை குணசேகரனும், விசாலாட்சி அம்மாவும் சேர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள். நந்தினியின் அப்பா மிகவும் மனது வேதனைப்பட்டு மொய் விருந்து செய்வதற்கான காரணம் பற்றி சொல்கிறார். நந்தினி அப்பாவை வலுக்கட்டாயமாக கீழே இழுத்து வந்து மீனாட்சி படத்தின் முன்னாடி பத்திரிகையை வைத்து முதல் பத்திரிகையை ஞானத்திடம் கொடுத்து அழைக்கிறாள். ஞானம் அதை நினைத்து கண்கலங்குகிறான். 

ஞானம் நந்தினிக்கு செய்ய தன்னிடம் எதுவும் இல்லாமல் பிச்சைக்காரன் போல இருக்கிறேன் என சொல்லி சக்தியிடம் வருத்தப்பட்டு பேசுகிறான். அதை கேட்டு ரேணுகாவும் அழுகிறாள். "பணம் இல்லைனா என்ன? நாம எல்லாரும் ஒத்துமையா இருந்தா அதுவே சந்தோஷம்" என ஞானத்தை சமாதானப்படுத்துகிறான் சக்தி.

Ethirneechal serial: ஞானம் இப்படிப்பட்டவனா? உண்மையை உடைத்த கரிகாலன்: எதிர்நீச்சலில் இன்று!

ஜனனிக்கு வேலை கிடைத்ததை பற்றி அனைவரிடமும் சொல்ல அனைவரும் வாழ்த்து கூறுகிறார்கள். அனைவரும் ஜனனி வேலைக்கு போவதை பற்றி சந்தோஷமாக பேசி சிரிக்கிறார்கள். அந்த நேரத்தில் விசாலாட்சி அம்மா வந்து கதிர், சக்தி, ஞானம் என மூவரையும் அழைத்து சென்று குணசேகரனிடம் சமாதானமாக பேசி காதுகுத்து விழாவுக்கு அழைக்க அழைத்து செல்கிறார். என்ன விஷயம் என குணசேகரன் கேட்க "எனக்கு இதுங்க மேல எல்லாம் எனக்கும் கரிசனம் கிடையாது. தம்பி மகளுக்கு நடக்குற இந்த விழா பத்திரிகையில் உன்னுடைய பெயர் இல்லைனா நல்லா இருக்காது" என சந்தனம் பேசுகிறார் விசாலாட்சி அம்மா.

ஆனால் குணசேகரனோ அனைவரையும் தூக்கி எறிந்து பேசுகிறார். கதிரை ஏத்திவிட்டு அவமானப்படுத்துகிறார். "உங்க அம்மா தான் கூட்டிட்டு வந்தாங்க. நான் உங்ககிட்ட எதையும் எதிர்பார்க்கவில்லை" என்கிறாள் ஜனனி. அடுத்த டார்கெட் ஞானம் பக்கம் திரும்ப " உங்க எல்லாருக்கும் நான் தான் கரிகாலனை ஏத்தி விட்டு ஏமாத்தினேன் என நினைக்கிறீங்க என கேள்விப்பட்டேன். இந்த மொய் விருந்தில் மட்டும் பணத்தை வசூல் செய்து காட்டுங்க" என சவால் விடுகிறார் குணசேகரன்.

ஜனனி அடுத்த நாள் வேலையில் சேர்வது பற்றி சக்தியும் ஜனனியும் பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது சக்தி நானும் வேலையில் சேர போகிறேன் என சொல்கிறான். இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொள்கிறார்கள். இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 14 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

புதிய உத்வேகத்துடன் புதிய பொலிவுடன் ஜனனி தன்னுடைய முதல் நாள் வேலைக்கு கிளம்புகிறாள். அனைவரும் அவளை வாழ்த்தி வழியனுப்ப தயாராக இருக்கிறார்கள். அந்த சமயத்தில் கரிகாலன் தன்னுடைய கூட்டாளியுடன் எந்த ஒரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் குணசேகரன் வீட்டுக்குள் நுழைகிறான். அவனை பார்த்ததும் கதிர், சக்தி, ஞானம் என மூவரும் அவன் மீது பாய குணசேகரன் கரிகாலனுக்கு ஆதரவாக பேசுகிறார்.
 
Ethirneechal serial: ஞானம் இப்படிப்பட்டவனா? உண்மையை உடைத்த கரிகாலன்: எதிர்நீச்சலில் இன்று!

அந்த நேரத்தில் கரிகாலன் பெரிய இடியை தூக்கி போடுவது போல "அந்த நடிகையுடன் இரெண்டு மணி நேரம் பேச வைத்து இருக்கேன். இளிச்சுகிட்டு தான் பேசினார். சொல்லலையா" என குண்டை போட ரேணுகா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவன் பொய் சொல்கிறான் என ஞானம் கெஞ்ச கரிகாலன் அடுக்கிக்கொண்டே போகிறான்.
 
கரிகாலனை சப்போர்ட் செய்த குணசேகரனை பார்த்து "எங்களை கஷ்டப்படுத்துறவனுக்கு இந்த வீட்ல என்ன வேலை?" என ஆவேசப்பட "கஷ்டப்படுத்துறவன் எவனும் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னா முதல நீங்க தாண்டா வரக்கூடாது" என தம்பிகளை கரிகாலன் முன்னிலையில் விட்டுக் கொடுக்கிறார். "அவன் என்னோட ஆளு" என குணசேகரன் சொல்ல "எது உங்க ஆளா?" என நந்தினி கேள்வி கேட்கிறான். "ஆமாம் அவன் என்னுடைய ஆளு தான்" என ஆணவமாக குணசேகரன் பேச கரிகாலனுக்கு குளுகுளுவென இருக்கிறது. விசாலாட்சி அம்மா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் தான் முடிவெடுப்பேன்” கறாராக சொன்ன ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செ.க்கள்”விஜய்-இபிஎஸ் சேரக் கூடாது” காய் நகர்த்தும் ரஜினிகாந்த்! காரணம் என்ன?TVK Vijay Meets Rahul Gandhi: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!விஜய்யை பார்க்கப்போன போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
நீட் தேர்வு எதற்காக என்பதே தெரியாத மத்திய அரசு- பிடிவாதம் விட்டு ரத்துசெய்ய வேண்டும்- அன்புமணி!
நீட் தேர்வு எதற்காக என்பதே தெரியாத மத்திய அரசு- பிடிவாதம் விட்டு ரத்துசெய்ய வேண்டும்- அன்புமணி!
TVK-Congress alliance: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி?  மாறும் கூட்டணி கணக்கு!
TVK-Congress alliance: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!
DD vs Nayanthara: ”என் புடவை கலர்ல நீ கட்டலாமா?” நயன்தாரா இப்படி தான் சொன்னாங்க! சர்ச்சையான  பேட்டி
DD vs Nayanthara: ”என் புடவை கலர்ல நீ கட்டலாமா?” நயன்தாரா இப்படி தான் சொன்னாங்க! சர்ச்சையான பேட்டி
காணாமல் போன நகை..  சிசிடிவி கேமிராவால் சிக்கிய பெண்
காணாமல் போன நகை.. சிசிடிவி கேமிராவால் சிக்கிய பெண்
Embed widget