Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal serial: போலீசிடம் இருந்து சித்தார்த்தை கல்யாண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லும் ராமசாமி. குணசேகரன் தோல்வியை உறுதி செய்யும் ஜனனி. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 20) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சக்தி, ஜனனிக்கு போன் செய்து ஷாக் ஒன்றை கொடுக்கிறான். "கிருஷ்ணசாமியும் ராமசாமியும் வந்து சித்தார்த்தை கூட்டிட்டு போயிட்டாங்க. எப்படியாது கல்யாணத்தை தடுத்து நிறுத்தியாகணும் ஜனனி " என சொல்ல ஜனனி அதிர்ச்சி அடைகிறாள்.
தர்ஷினி - சித்தார்த் கல்யாண வேலைகள் மிகவும் மும்மரமாக மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. உமையாள் அம்மா, கணவர், நாச்சியப்பன் என அனைவருமே அங்கே விருப்பமில்லாமல் வந்து இருக்கிறார்கள். "வந்தோமா, சாப்பிட்டோமா, கிளம்பினோமான்னு இருந்தா நல்லது" என குடும்பத்தினரை மிரட்டுகிறாள் உமையாள். "இந்தக் கல்யாணத்தை நடத்துவது பெரிய சவால். அதுல நாங்க ஜெயிக்கணும்" என குணசேகரன் ஆணவமாக பேசுகிறார். நாச்சியப்பன் அனைத்தையும் கேட்டு கொண்டு அமைதியாக இருக்கிறார்.
"தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணனும் என அவர் போடுற திட்டம் அவங்களுக்கு தோல்வியை மட்டும் தான் தர போகுது. அது மிகப் பெரிய தோல்வி" என ஜனனி சொல்கிறாள். கொன்றவை, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி குழப்பமாக பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்றைய எபிசோடில் கரிகாலனை அழைத்துக் கொண்டு சித்தார்த் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக ராமசாமியும் கிருஷ்ணசாமியும் செல்கிறார்கள். வழியில் நந்தினியும் ரேணுகாவும் ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து விடுகிறார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்று சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார்கள்.
அடுத்த நாள் காலை ராமசாமியும் கிருஷ்ணசாமியும் போலீஸ் ஸ்டேஷன் வந்து சித்தார்த்தை அழைத்துச் செல்கிறார்கள். "உங்களால் ஒன்னும் செய்ய முடியாது" என கதிர் அவர்களை பார்த்து சவால் விட "உன்னால் இங்கேயே இருந்து என்ன முடியுமோ அதை பண்ணு" என நக்கலாக சொல்லிவிட்டு செல்கிறார்கள்.
ஈஸ்வரி கொன்றவையை சந்திக்கிறாள். "பையன் காணாமல் போய்விட்டான் எனும்போது எந்த தைரியத்தில் குணசேகரன் திருமண ஏற்பாடுகளை செய்கிறார் எனப் புரியவில்லை. இதற்கு பின்னால் பெரிய பிளான் ஏதாவது இருக்குமோ" என சந்தேகப்படுகிறார். "தர்ஷினியின் மனநிலை, வயசு இது அனைத்தையும் வைத்து சட்ட ரீதியாக அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும்" என சொல்கிறார்.
வீட்டுக்கு வந்த ஈஸ்வரி நந்தினிக்கு போன் செய்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என விசாரிக்க, நந்தினி நடந்த அனைத்து விஷயத்தை பற்றி சொல்கிறாள். "வீட்டில் தர்ஷினியும் இல்லை மற்றவர்களும் இல்லை. அவர் தர்ஷினியை எங்கேயோ கூட்டிட்டு போய் இருக்கார்" என சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைகிறாள். இதுதான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.