மேலும் அறிய
Advertisement
EthirNeechal : எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி - ஜீவானந்தம் இடையே என்ன உறவு?... அடுத்த மீட்டிங் சீன் எப்போ தெரியுமா?
எதிர் நீச்சல் தொடரில் ஜீவானந்தம் - ஈஸ்வரிக்கு இடையில் இருக்கும் அந்த உறவு என்ன? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடர் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எதிர் நீச்சல் தொடருக்கு இருக்கும் மாபெரும் வரவேற்பு. சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை விறுவிறுப்புக்கும் ட்விஸ்ட்களுக்கும் குறைவே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் உடன் எபிசோடை முடிப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது.
வெயிட்டேஜ் அகிகம் :
எதிர் நீச்சல் தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெயிட்டேஜ் அகிகம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலை ஸ்வாரஸ்யமாக வைத்து இருக்க முக்கியமான காரணங்களில் ஒன்று நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு. அந்த வகையில் ஆதி குணசேகரன், நந்தினி, ரேணுகா, கரிகாலன் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

ஜீவானந்தம் என்ட்ரி :
சமீபத்தில் தான் எதிர் நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வத்தின் என்ட்ரி வந்தது. அன்று முதல் சீரியலில் ட்விஸ்டுகள் ஏராளம். ஆதி குணசேகரன் அப்பத்தாவின் 40 % ஷேரை ஜீவானந்தம் கைப்பற்றியதில் இருந்து சீரியல் மேலும் சூடு பிடித்துள்ளது. அதை எப்படியாவது அவனிடம் இருந்து திரும்பி பெற வேண்டும் பல வகையில் முயற்சி செய்து ட்ராமா போட்டு வருகிறார் குணசேகரன்.
அதில் ஒன்று தான் வீடு பெண்களை வைத்து சென்டிமென்டாக ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை திரும்ப பெறுவது. அதன் முதல் படியாக குணசேகரன் மனைவி ஈஸ்வரி, ஜீவானந்தத்தை சந்தித்து பேச முயற்சி செய்கிறாள். ஆனால் அது முடியாததால் கௌதமின் உதவியை நாடுகிறாள். கெளதம் மூலம் ஜீவானந்தம் ஈஸ்வரியுடன் போனில் பேசுகிறார்.

ஈஸ்வரி - ஜீவா காதல் :
ஈஸ்வரி தனது தரப்பு நியாயங்களை ஜீவானந்தத்திடம் சொல்லி இது தான் நீங்கள் சமுதாயத்துக்கு செய்யும் நல்லதா. அடுத்தவர்கள் சொத்தை பிடுங்கி சமுதாயத்துக்கு நல்லது செய்வது தான் உங்களின் கோட்பாடா? என கேள்விகளை அடுக்க ஜீவானந்தம் இதற்கு காலம் பதில் சொல்லும். இனி நான் உங்களுடன் பேச விருப்பப்படவில்லை.
நீங்கள் குணசேகரன் மனைவி என்பதற்காக நான் பேசவில்லை. 'ஈஸ்வரி' இந்த பெயர் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பெயராக இருந்தது. அதனால் தான் பேச சம்மதித்தேன். இனி நீங்கள் என்னுடன் பேச முயற்சி செய்ய வேண்டாம் என சொல்லி போனை வைத்து விடுகிறார்.
யார் இந்த ஜீவானந்தம்? ஏன் அவர் அப்படி சொன்னார் என்ற கேள்விக்குறி ஈஸ்வரி முகத்தில் தெரிந்தது. ஆம். ஜீவாவும், ஈஸ்வரியும் முன்னாள் காதலர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் பேசியதோ பழகியது கூட கிடையாது. ஆனால் இருவருக்குள்ளும் இருந்த அந்த உன்னதமான உணர்வு. புரட்சி தத்துவங்களை அன்று சுவற்றில் எழுதிய அந்த ஜீவா தான் இன்று எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நினைக்கும் ஜீவானந்தம். இவர்களின் அந்த காதல் காட்சிகள் எதிர் நீச்சல் 275வது எபிசோடில் ஒளிபரப்பானது. விரைவில் இவர்களின் சந்திப்பு தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion