Ethirneechal : குணசேகரனின் அடுத்த மாஸ்டர் பிளான்..எல்லாமே நடிப்புதானா? ரசிகர்களுக்கு ஷாக்?
*சொத்தை மீட்டு கொண்டு வரவேண்டியது வீட்டு மருமகள்களோட கடமை என குணசேகரன் கட்டளை* இந்த டீலுக்கு ஒத்துக்கொண்ட ஜனனிஇன்று எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடக்கும்?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் காசிக்கு போன ஆதி குணசேகரன் அம்மா விசாலாட்சி வீட்டுக்கு திரும்புகிறார்.
மருத்துவமனையில் இருந்து குணசேகரனும் டிஸ்சார்ஜ் ஆகி வருகிறார். மகனுக்கு ஒரு பக்கம் செயலிழந்து பக்கவாதம் வந்ததை கேட்டறிந்து மிகவும் கவலையாக இருக்கிறார் விசாலாட்சி அம்மா. சொத்து பறிபோனது பற்றி தெரிந்து மிகவும் அதிர்ச்சி அடைகிறார்.
அதனை தொடர்ந்து இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் குணசேகரன், விசாலாட்சி மற்றும் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக டைனிங் ஹாலில் இருக்கிறார்கள். குணசேகரன் அம்மா விசாலாட்சியிடம் "இந்த சொத்தை மீட்டு கொண்டு வர வேண்டியது உன் மருமகள்களோட கடமை அம்மா" என சொல்கிறார். அதை கேட்டு கடுப்பான ரேணுகா, வீட்டிலதான் ஆம்பள ஆள் இத்தனை பேர் இருக்கீங்கல்ல? களத்துல இறங்கி ஆடுங்க" என நக்கலாக சொல்ல "என்னடி பேசிக்கிட்டே இருக்கே?" என சொல்லி எகிறிக்கொண்டு அடிக்க கை ஓங்குகிறான் ஞானம்.
ரேணுகாவை அடிக்கப்போவதை பார்த்த ஜனனி பொறுக்கமுடியாமல் "போதும் நிறுத்துங்க... சொத்தை நாங்க வாங்கி தரோம்" என்கிறாள். வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவரும் இதை நீ சொல்லவேண்டும் என்று தானே நாங்கள் ஆசைப்பட்டோம் என்பதுபோல யோசிக்கிறார்கள்.
அடுத்த காட்சியில் பெட்ரூமில் குணசேகரன் ஓய்வெடுக்க அவரை சுற்றி தம்பிகளுக்கும், கரிகாலனும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உடன் ஆடிட்டரும் இருக்கிறார். அந்த சமயத்தில் "ஞானம், ஆடிட்டர் சொன்னது போல எல்லாத்தையும் வீட்டு பொம்பளைங்க பேர்ல எழுதி இருந்தோம்ல" என புதிய திட்டத்தை பற்றி பேசிக்கொள்கிறார்கள்.
குணசேகரன் சொல்ல சொல்ல கதிர் முகம் அப்படியே கோபத்தில் சிவந்து போகிறது. கரிகாலனும் ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டு இருக்கிறான். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.
ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் ஹைப்பிலேயே வைத்து இருப்பதுதான் எதிர் நீச்சல் சீரியலின் ஸ்பெஷலிட்டி. ஜீவானந்தத்தை குணசேகரன் வீட்டு பெண்கள் சந்திப்பார்களா? அப்படி சந்தித்தால் என்ன நடக்கும்? ஜீவானந்தம் மனம் மாறுவாரா? குணசேகரன் நிலை என்ன? ஜனனியின் எப்படி இந்த சவாலை எதிர்கொள்ளப்போகிறாள்? அந்த வகையில் இனி வர இருக்கும் கதைக்களமும் மிகவும் பரபரப்பாக இருக்க போகிறது என்பதால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து தவறாமல் எதிர் நீச்சலை ரசித்து வருகிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.