Bharathi Kannamma: முடிவுரையா? பிக்னிக் கிளம்பும் குடும்பத்தினர்..க்ளைமேக்ஸுக்கு வந்த பாரதி கண்ணம்மா தொடர்?
ஜானகி,ராமன் இருவரும் ஒருநாள் குடும்ப பிரச்சனையெல்லாம் மறந்துட்டு கணவன்,குழந்தைகளோடு பிக்னிக் போய்ட்டு வாங்கன்னு சொல்லி பாரதி, கண்ணம்மாவிடம் சத்தியம் பெறுகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மற்ற சீரியல்களை காட்டிலும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியின் விலகல், ஒரே மாதிரியான காட்சியை மீண்டும் மீண்டும் காட்டியது என இந்த தொடர் பார்வையாளர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது.
பாரதி - கண்ணம்மா பிரிவு, பரிதவிக்கும் குழந்தைகள் என ஒரே மாதிரியான காட்சிகள் இந்த தொடரை எப்படா முடிப்பீங்க என கதறும் அளவுக்கு மாறிவிட்டது. இதனிடையே இனி வரும் பாரதி கண்ணம்மாவின் எபிசோட்கள் நிச்சயம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதியின் ஹாஸ்பிட்டலில் ஆபரேஷனுக்காக சேர்க்கப்பட்ட ஜானகி அம்மாவிடம் மைனர் ஆபரேஷன் என பொய் சொல்லி பாரதி சம்மதிக்க வைக்கிறார்.
ஆபரேஷனுக்காக அனைத்து ஏற்பாடுகள் நடந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக ஜானகி இறந்து விடுகிறார். மனைவி இறப்பை தாங்க முடியாமல் அவர் மீது சாய்ந்து அழும் அவரது கணவர் ராமனும் இறக்க மருத்துவமனையே சோகத்தில் மூழ்குகிறது. அதன்பின்னர் பாரதி,கண்ணம்மாவும் ஜானகி,ராமன் ஆகியோரைப் பற்றி நினைக்கின்றனர். பின்னர் மறுநாள் பாரதி கண்ணம்மாவுக்கு போன் செய்து ஜானகி,ராமன் ஆகியோரிடம் தான் செய்த சத்தியம் பற்றி கூறுகிறார். அதாவது ஒருநாள் குடும்ப பிரச்சனையெல்லாம் மறந்துட்டு கணவன்,குழந்தைகளோடு பிக்னிக் போய்ட்டு வாங்கன்னு சொல்லி சத்தியம் பெறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து நான் இன்னைக்கு லீவ் போட்டுட்டேன். நீ, நான், லட்சுமி, ஹேமா எல்லோரும் பிக்னிக் போறோம் என கூறுகிறார். இதன்மூலம் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக பார்வையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்