மேலும் அறிய

Baakiyalakshmi serial August 9: ஜெனி குட் நியூஸ் சொல்லிட்டா... அமிர்தாவுக்கு வரப்போகும் புது சிக்கல்... எழிலுக்கு பாக்கியா கொடுத்த எனர்ஜி...

Baakiyalakshmi:விரக்தியில் இருந்த எழிலிடம் ஆறுதலாக பேசி உற்சாகப்படுத்துகிறாள் பாக்கியா. ஜெனி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்டில் சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். இன்று பாக்கியலட்சுமியில்.  

Baakiyalakshmi serial August 9  : விஜய் டிவியின் பாப்புலர் தொடரான 'பாக்கியலட்சுமி' தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 9) எபிசோடில் ஈஸ்வரி பேசியதை நினைத்தும், புரொடியூசர் பேசியதையும் நினைத்தும் மாடியில் நின்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான் எழில். அமிர்தா அங்கே வந்ததும் அவளை கட்டிப்பிடித்து அழுகிறான். அமிர்தா எவ்வளவு சமாதானம் செய்தும் விரக்தியில் பேசுகிறான் எழில். அப்போது அவர்களை தேடி வந்த பாக்கியா எழில் அழுவதை பார்த்து ஷாக்காகிறாள்.

Baakiyalakshmi serial August 9: ஜெனி குட் நியூஸ் சொல்லிட்டா... அமிர்தாவுக்கு வரப்போகும் புது சிக்கல்... எழிலுக்கு பாக்கியா கொடுத்த எனர்ஜி...

"பாட்டி பேசியதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. செழியன் கிட்ட கூட நான் பணம் வேண்டாம்ன்னு தான் சொன்னேன். அவன் தான் கேக்கவே இல்லை" என்கிறாள் பாக்கியா. "நானும் உன்னை நல்லா பாத்துக்கணும் என நினைக்கிறன். நீ ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயசுல வேலை வேலைனு ஓடிக்கிட்டே இருப்பதை பார்த்தா எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. எவ்வளவோ முயற்சி பண்ணறேன். ஆனலும் என்னால எதுவுமே பண்ண முடியல. இப்படியே விட மாட்டேன். நிச்சயமா ஒரு நாள் நான் ஜெயிப்பேன். உன்ன, இனியாவ, இந்த வீட்டை எல்லாரையும் நான் நல்ல படியா பாத்துப்பேன். சீக்கிரமாவே நான் ஒரு படம் எடுப்பேன். ஜெயிப்பேன். அப்படி இல்லாட்டி பாட்டி சொன்ன மாதிரி நான் ஏதாவது ஒரு வேலைக்கு போறேன்" என்கிறான் எழில்.

"நீ உழைக்க முடியாத பையன் இல்லைனு எனக்கு தெரியும். உன்னோட கனவை துரத்திட்டு போற.நிச்சயம் அதை நீ அடைவ. அந்த கவனத்தை மட்டும் சிதறவிடாத. என்னாலயே  பண்ணி முடியுதுனா ஏன் உன்னால பண்ண முடியாது. நீ பெரிய ஆளா வந்து என்னை காரில் கூட்டிட்டு போவ. அவார்ட் எல்லாம் வாங்குவ. அப்போ என்னை மேடைக்கு வர சொல்லுவ என இப்படி நிறைய கனவு வச்சு இருக்கேன். நீ என்னனா இப்படி பேசிட்டு இருக்க. பாட்டி கொஞ்ச நாளா எல்லார் பத்தியும் ரொம்ப கவலை படுறாங்க. அதுனால தான் அப்படி பேசிட்டாங்க" என பாக்கியா எழிலை ஊக்கப்படுத்தும் படி பேச எழில் சந்தோஷப்படுகிறான். 

கோபி வீட்டுக்கு குடித்து விட்டு வந்து கதவை தட்ட ராதிகா திறக்காததால் அவரே சாவியை போட்டு திறந்து உள்ளே போகிறார். ராதிகாவுடன் பேச வேண்டும் என ரூம் கதவை ரொம்ப நேரமா தட்டுறார் ஆனால் அப்பாவும் ராதிகா வெளிய வரவேயில்லை. அதனால் சத்தமா பாட்டு போட்டு அட்ராசிட்டி பண்ண கடுப்பான ராதிகா வெளியில வந்து கோபியை திட்டி சவுண்டை குறைக்க சொல்லிவிட்டு உள்ளே போகிறாள். கோபி வெளியில் உட்கார்ந்து கொண்டு புலம்புகிறார்.

Baakiyalakshmi serial August 9: ஜெனி குட் நியூஸ் சொல்லிட்டா... அமிர்தாவுக்கு வரப்போகும் புது சிக்கல்... எழிலுக்கு பாக்கியா கொடுத்த எனர்ஜி...

ஜெனியும் செழியனும் பேசி கொண்ட இருக்கிறார்கள். அப்போது ஜெனி எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. வாமிட் வர மாதிரி இருக்கு என்கிறாள். கொஞ்ச நேரத்தில் அதெல்லாம் சரியாகிடும் என்கிறாள். அப்போது செழியன் வீட்டுக்கு பணம் கொடுத்தது பற்றி கேட்டு" நீ என்னை பாராட்டவே இல்லையே" என கேட்கிறான். "அது உன்னோட கடமை செழியா. இருந்தாலும் எனக்கு சந்தோஷமா இருந்துது. நீ ரொம்ப நல்ல விதமா மாறிட்ட. அடுத்த தடவை நீ ஆண்டிக்கு பணம் கொடுக்கும் போது அவங்க தனியா இருக்கும் போது குடு. இப்படி எல்லார் முன்னாடியும் கொடுக்காத" என்கிறாள் ஜெனி.

"ஆமா பாட்டி பேசினது எனக்கே ரொம்ப கஷ்டமா போயிடுச்சு" என்கிறான் செழியன். "இன்னும் கொஞ்ச நாள் தான். சீக்கிரம் எழில் சினிமாவுல பெரிய ஆளா வந்துடுவான். வீட்டுக்கும் நிறைய செய்வான்" என ஜெனி சொல்லி கொண்டேயிருக்கும் போது அவளுக்கு வாந்தி வர பாத்ரூமுக்கு ஓடி விடுகிறாள். பதறி போன செழியன் என்ன பண்ணுது என விசாரிக்க நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேனா என சந்தேகமா இருக்கு என சொல்லி மெடிக்கல் போய் டெஸ்டிங் கிட் வாங்கி வர சொல்கிறாள். 

கீழ கிச்சனுக்கு வந்த ஜெனி பாக்கியாவிடம் சென்று "எனக்கு கலையிலே இருந்து வாமிட் வந்துகிட்டே இருக்கு, தலை சுத்துது" என சொல்ல செல்வி, அமிர்தா என ஒவ்வொருவரும் இது தரவா அது தரவா என கேட்கிறார்கள். ஆனால் ஈஸ்வரிக்கு சந்தேகம் வந்து "என்ன ஜெனி ஏதாவது நல்ல செய்தியா" என கேட்க " ஆமா பாட்டி, எனக்கும் அப்படி தான் தோணுது" என்கிறாள். அனைவரும் அதை கேட்டு சந்தோஷப்படுகிறார்கள். இது தான் இன்றைய எபிசோட் கதைக்களம்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget