மேலும் அறிய

Tamil Kudimagan Trailer: ’பறையரில் இருந்து பறைய எடுத்துட்டா எந்த பிரச்னையும் இருக்காது’- கவனம் பெறும் ’தமிழ்க்குடிமகன்’ ட்ரைலர்

Tamil Kudimagan Trailer: பெட்டிக்கடை மற்றும் பகிரி படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் இசக்கி கார்வாணன்.

Tamil Kudimagan Trailer: பெட்டிக்கடை மற்றும் பகிரி படங்களை இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வாணன். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ்க்குடிமகன். இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திர சேகர், சேரன், மலையாள நடிகர் லால், மறைந்த நடிகர் மயில்சாமி, வேல ராம மூர்த்தி, சென்ராயன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

படத்தின் ட்ரைலரை வைத்துப் பார்க்கும்போது, ஒரு கிராமப்புறத்தில் ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவர் இறந்து விடுகிறார். இறந்தவரை சடங்குகள் செய்து அடக்க செய்ய வேண்டும் என்பதால், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை அழைக்கிறார்கள், ஆனால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வரமறுக்கவே, பிரச்சனை ஆகிறது. இதற்காக அருகில் உள்ள ஊரில் உள்ளவர்களை அழைக்கச் செல்வது போலவும், ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைவதால், தங்கள் சொந்த ஊரில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்தவரையே மீண்டும் அழைக்கிறார்கள். அவர் வர மறுக்கவே பிரச்சனை ஏற்படுகிறது. 

இதனால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் காவல் துறையையும், நீதி மன்றத்தையும் அணுகுகிறார், அதன் பின்னர் நடப்பது க்ளைமேக்ஸ் காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குநர் சேரன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராகவும், அவர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவராகவும் உள்ளார். சேரனை இறுதிச் சடங்குகள் செய்ய அழைக்கும் காட்சியில், தான் வி.ஏ.ஓ என கூறுவதைப் போலவும், அதற்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர், “ பெரிய மைசூர் மகாராஜா பேரன் இவரு..போடா” என கூறுவது போன்ற வசனம் உள்ளது. 

அதேபோல், சேரனின் மனைவியாக இருப்பவர், ”அனைவரும் காந்தியைப் போலவும் பெரியாரைப் போலவும் இருந்துவிட்டால் ஊர் உலகத்தில் பிரச்னை இருக்காதுல” என கூறுவது போன்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. 

வழக்குரைஞராக வரும் எஸ்.ஏ. சந்திர சேகர், பறையர் என்ற வார்த்தையில் இருந்து பறையை எடுத்துவிட்டால் ஐயர் மட்டும் இருக்கும், அப்பறம் என்ன நாட்டில் உள்ள அனைத்து பிரச்னையும் இருக்காது’ என கூறும் வசனமும், ’உங்களுக்கு கோமனம் கட்டியுட்டது நாங்கதான், படிக்கவெச்சது நாங்கதான், சமூக நீதி வாங்கிக்கொடுத்தது நாங்கதான் என கூறும் ஒருவர் கூட இவரது போராட்டத்திற்கு ஆதரவு தந்தார்களா? இல்லை.. காரணம் ஜாதியை வைத்துதான் அவர்கள் அரசியல் செய்து வருகின்றனர்’ என்ற வசனம் என ட்ரைலர் முழுவதும் மிகவும் கூர்மையான வசனங்களைக் கொண்டதாக உள்ளது. 

இந்த படத்தின் ட்ரைலருக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், வசனங்கள் கவனம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார்.  மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget