Priya Bhavani Shankar Tweet: மண்டேலா திரைபடக்குழுவிற்கு அன்பை அள்ளித்தந்த ப்ரியா பவானி சங்கர்
யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் மண்டேலா திரைப்படம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் பிரியா பவானி ஷங்கர் .
நகைச்சுவை நாயகன் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சைலேந்திரா இயக்கத்தில் பரத் சங்கர் இசையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக மண்டேலா வெளிவந்தது . அண்மைக்காலமாக பல படங்களில் கதையின் நாயகனாகவும் அதே போல முன்னணி கதாபாத்திரங்கள் ஏற்றும் நடித்துவருகிறார் யோகி பாபு.
மண்டேலா", ஒரு கிராமத்தையும் அந்த கிராமத்தில் உள்ள இரண்டு ஜாதிய அரசியலில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அழகாக இயக்குனர் தெளிவாக காண்பித்தார். அந்த அரசியல் கட்சிகளுக்கும் யோகிபாபுவிற்கும் இடையே என்ன உறவு என்பதை சுவாரசியம் கலந்த நகைச்சுவையோடு அளித்துள்ளது மண்டேலா.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் சில இடங்களில் சர்ச்சை கூறிய படமாகத்தான் இருந்தது . பல நடிகர் நடிகைகளும் இந்தப் படத்தை பார்த்து தங்களின் விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .இதனை தொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ,

யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் #Mandela ❤️ @madonneashwin @vidhu_ayyanna @yogibabu_offl ணா! என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்🙏🏼
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 1, 2021

"யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் #மண்டேலா ! என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்" என்று தனது கருத்தினை பதிவிட்டு இருந்தார் .
இந்த டுவீட் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது .