Tamannaah Bhatia: “பார்க்க தான் சிறுசு; விலையோ பெரிசு” - வாய்ப்பிளக்கவைக்கும் தமன்னாவின் வாட்ச் இத்தனை லட்சமா?
Tamannaah Bhatia Watch Price: நடிகை தமன்னா அண்மையில் விமான நிலையத்திற்கு வந்த போது, கையில் குட்டி வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். இந்த Cartier நிறுவனத்தின் வாட்ச் எவ்வளவு தெரியுமா?
தென்னிந்திய நடிகையாக வலம் வந்த தமன்னா தற்போது பாலிவுட்டில் கலக்கி வருகிறார். வெப்சீரிஸ், படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா ஷூட்டிங்கிற்காக அடிக்கடி வெளிநாடுகள் முதல் இந்தியாவில் உள்ள பிற இடங்களுக்கு பயணம் செய்வதால் அவ்வப்போது மும்பை விமான நிலையத்தில் காணப்படுகிறார். முழுக்க முழுக்க மும்பையின் ஃபேஷன் ஸ்டைலுக்கு பிட்டாகிவிட்ட தமன்னாவை, தற்போது அங்குள்ள மீடியாக்களும் பாராட்ட ஆரம்பித்துள்ளன.
ஷாக் கொடுக்கும் தமன்னாவின் வாட்ச் விலை:
அந்த வகையில் சமீபத்தில் தமன்னா அணிந்திருந்த வாட்ச் ஒன்று சோசியல் மீடியாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் ஃபேஷனை விரும்பும் பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. டெனிம் என்றாலே நமக்கெல்லாம் ஜீன்ஸ் பேண்ட் தான் நினைவுக்கு வரும், ஆனால் தமன்னா டெனிம் மேக்ஸி உடையுடன் வந்து புதுப்பாணியில் கலக்கியிருக்கிறார்.
ஆனால், காதில் சின்னதாக ஒரு கம்மல், மேக்கப்பே இல்லாமல் பளீச் அழகு என தேவதையாய் ஜொலிக்கும் தமன்னா கையில் அணிந்திருக்கும் வாட்ச்சில் தான் மொத்த விஷயமே அடங்கியிருக்கிறது. ஆம், பார்க்க மிகவும் சிறியதாக க்யூட்டாக இருக்கும் இந்த கை கடிகாரத்தின் விலை12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாகும். கார்டியர் பிராண்ட்டைச் சேர்ந்த இந்த வாட்ச் தமன்னாவின் டெனிம் கேஸிக்கு சிறப்பான தோற்றத்தை கொடுக்கிறது என்றாலும், இதன் விலையைக் கேட்டுத் தான் நெட்டிசன்கள் வாய் பிளந்துள்ளனர்.