Taapsee pannu: தொடர் தோல்விகள் குறித்து கேள்வி... பத்திரிக்கையாளர்களிடம் கடுப்பான டாப்ஸி
2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சும்மாண்டி நாதம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, தமிழில் தனுஷ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார்.
தொடர் தோல்விகள் குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு நடிகை டாப்ஸி ஆவேசமாக பதிலளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சும்மாண்டி நாதம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, தமிழில் தனுஷ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் வஸ்டாடு நா ராஜு, மிஸ்டர். பெர்ஃபெக்ட்,வீரா, மோகுடு, தராவு, குண்டெல்லோ கோதாரி, சாடேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும் டேவிட் தவானின் நகைச்சுவை படமான சாஷ்மே படூர் மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
View this post on Instagram
அதேசமயம் நடிப்பு தவிர டாப்ஸி தி வெடிங் ஃபேக்டரி என்ற நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் வெளியான டாப்ஸியின் ஷபாஸ் மிது மற்றும் டோபரா ஆகிய இரு படங்கள் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவரிடம் இரு படங்களின் தோல்விகளை சுட்டிக்காட்டி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வியெழுப்பினர்.
View this post on Instagram
அப்போது டாப்ஸி, 'எந்தப் படத்துக்கு எதிர்ப்பு இல்லை என்று சொல்லுங்கள்? என நிருபர்களிடம் கேள்வியெழுப்பினார். முதலில் படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என அவர் தெரிவிக்க, மீண்டும் அவரிடம் டாப்ஸிக்கும் நிருபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அவரை பார்த்து எதற்காக சத்தம் போடுகிறீர்கள். அப்புறம் நாங்கள் தவறானவர்கள் என்று கூறுவீர்கள் என டாப்ஸி காட்டமாக பேசினார்.
Kangana Ranaut was Right Abt Taapsee Pannu and Swara Bhaskar
— Gautam Gada (@GautamGada) September 14, 2022
Abt B Grade Actresses
Retweet#taapseepannu #taapsee #KanganaRanaut #swarabasker pic.twitter.com/oxbS4Sk6OT
டாப்சியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் தான் டாப்ஸி இப்படி நடந்து கொள்கிறார் என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.