Taali Trailer: திருநங்கையாக சுஷ்மிதா சென்... மூன்றாம் பாலினத்துக்காக போராடும் சமூக ஆர்வலர்... வெளியானது 'தாலி' டிரைலர்
திருநங்கையாக மூன்றாம் பாலினத்தின் உரிமைக்காக போராடும் சுஷ்மிதா சென் நடித்துள்ள 'தாலி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
![Taali Trailer: திருநங்கையாக சுஷ்மிதா சென்... மூன்றாம் பாலினத்துக்காக போராடும் சமூக ஆர்வலர்... வெளியானது 'தாலி' டிரைலர் Taali trailer is out now with sushmitha sen acting as a transgender Taali Trailer: திருநங்கையாக சுஷ்மிதா சென்... மூன்றாம் பாலினத்துக்காக போராடும் சமூக ஆர்வலர்... வெளியானது 'தாலி' டிரைலர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/07/ed5c8721f3b9e817e8d7cd928b2b768c1691422098849224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கத்தில் நடிகை சுஷ்மிதா சென் நடித்துள்ள வெப் தொடர் 'தாலி'. மும்பையில் வசித்து வரும் சமூக ஆர்வலராகவும் திருநங்கைகளுக்கு குரல் கொடுக்கும் ஸ்ரீ கௌரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகை சுஷ்மிதா சென் ஸ்ரீ திருநங்கையாக நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஜியோ சினிமாவில் ஆகஸ்ட் 15 அன்று ஒளிபரப்பாக உள்ளது 'தாலி' திரைப்படம்.
மூன்றாம் பாலினத்திற்கான போர் :
கணேஷில் இருந்து கௌரியாக அவள் எப்படி மாறினாள், அந்த சமயத்தில் அவள் அனுபவித்த இன்னல்கள், பாகுபாடுகள், சங்கடங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது வெளியாகியுள்ள 'தாலி' படத்தின் டிரைலர். தாய்மையை நோக்கிய அவளது பயணம் நிச்சயம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களையும் அடையாளப்படுத்த வேண்டும் என நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகௌரி சாவந்த் யார்?
மும்பையைச் சேர்ந்த திருநங்கை மற்றும் ஆர்வலர் ஸ்ரீகௌரி சாவந்த் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த நபர்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக 2013ம் ஆண்டு தொடரப்பட்ட NALSA வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாலி டிரைலர் :
அர்ஜுன் சிங் பரன், கார்ட்க் டி நிஷாந்தர் மற்றும் அஃபீஃபா நதியாத்வாலா தயாரிப்பில் க்ஷிதிஜ் பட்வர்தன் திரைக்கதை எழுத தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். கடந்த மாதம் இப்படத்தை டீசரை சுஷ்மிதா சென் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ சினிமாவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
வெப் தொடர்களில் ஆர்வம் :
1994 -ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் நடிகர் நாகர்ஜூனா ஜோடியாக 'ரட்சகன்' படத்தில் கலக்கினார். அதனை தொடர்ந்து பாலிவுட் படங்களிலேயே பெரும்பாலும் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக திகழ்ந்த சுஷ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர்களை வளர்க்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருவதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான ஆர்யா சீசன் 3 தொடரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)