வளர்ப்பு குழந்தைகள், முன்னாள் காதலருடன் அமீர்கான் படத்துக்கு வந்த சுஷ்மிதா சென்.. இதுதான் சுஷ் ஸ்டேட்மெண்ட்
Sushmitha sen : லால் சிங் சத்தாவின் பிரீமியர் ஷோவில் நடிகை சுஷ்மிதா சென் தனது முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷால் மற்றும் அவரது மகள்கள் ரெனி சென் மற்றும் அலிசா சென் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
Sushmitha Sen : முன்னாள் காதலர்...இரு மகள்களுடன்...லால் சிங் சத்தா பிரீமியர் ஷோவிற்கு வந்த சுஷ்மிதா சென்
அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தாவின் பிரீமியர் ஷோவில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியானது. அதன் ஸ்க்ரீனிங் ஷோ முதல் நாள் இரவு திரையிடப்பட்டது. அதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ரன்தீப் ஹூடா, கல்கி கோச்லின், விஜய் வர்மா, ஷ்ரியா பில்கோன்கர்,ரோஹித் சரஃப், அதுல் குல்கர்னி, சுஷ்மிதா சென், அமீர்கான், நாக சைதன்யா அக்கினேனி, ரமேஷ் டௌரானி, டிஸ்கா சோப்ரா, ரிச்சா சாதா, அசுதோஷ் கோவாரிகர் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
பிரீமியர் ஷோவில் சுஷ்மிதா ஸ்டைலிஷ் போஸ்:
இந்த பிரீமியர் ஷோவில் நடிகை சுஷ்மிதா சென் மும்பையில் நடந்த லால் சிங் சத்தாவின் பிரீமியர் ஷோவிற்கு தனது முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷால் மற்றும் அவரது மகள்கள் ரெனி சென் மற்றும் அலிசா சென் ஆகியோருடன் வந்தார். சுஷ்மிதா சென் பத்திரிகைக்காரர்களுக்கு போஸ் கொடுத்து வந்த நிலையில் ரோஹ்மான் மற்றும் சுஷ்மிதாவின் இரண்டு மகள்களும் தீயேட்டருக்குள் சென்றனர். இந்த ஷோவிற்கு சுஷ்மிதா டெனிம் ஜம்ப்சூட் மற்றும் ஒரு கிளாஸ்ஸஸ் உடன் எப்போதும் போல் மிகவும் ஸ்டைலிஷாக வந்திருந்தார். ரோஹ்மான் ஒரு கருப்பு ஸ்வெட்ஷர்ட் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.
கெட்-டுகெதர் பார்ட்டியில் முன்னாள் காதலர் :
இதற்கு முன்தினம் சுஷ்மிதா தனது தாயின் பிறந்தநாளை ஒரு கெட்-டுகெதர் பார்ட்டியுடன் கொண்டாடியுள்ளார். இந்த பார்ட்டியில் ரோஹ்மானும் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் மூலம் லைவ் சேட் மூலம் தனது தாய்க்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு நன்றி கூறினார். அப்போது ரசிகர்கள் சுஷ்மிதாவின் முன்னாள் காதலர் பார்ட்டியில் உடன் இருப்பதை பார்த்துள்ளனர்.
View this post on Instagram
என்றும் நாங்கள் நண்பர்கள் :
2021ல் சமூக ஊடங்கங்கள் வாயிலாக சுஷ்மிதா சென் தனது காதலர் ரோஹ்மானை பிரிவதாக வெளிப்படையாக அறிவித்தார். அப்போது அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு "நாங்கள் இருவரும் நண்பரகளாக தொடங்கினோம், நண்பர்களாக இருக்கிறோம் எங்கள் உறவு நீண்ட நாட்களுக்கு முன்னரே முடிந்து விட்டது ஆனால் அன்பு அப்படியே இருக்கிறது" என்றார் சுஷ்மிதா சென். பிரிந்த நாள் முதல் இன்று வரை இருவரும் அன்பாகவே இருந்து வருகின்றனர். மேலும் சுஷ்மிதாவின் மகள்கள் ரெனி மற்றும் அலிசா இருவரும் ரோஹ்மானுடன் நெருங்கிய உறவாகவே இருந்து வருகின்றனர்.
புதிய உறவு :
இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் தலைவராக இருந்த தொழிலதிபர் லலித் மோடியுடன் தற்போது சுஷ்மிதா சென் உறவில் உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் சுஷ்மிதா சென் இதுவரையில் அதிகாரபூர்வமாக இது பற்றி எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.