Surya 41 : 18 ஆண்டுகளுக்கு பின் பாலாவுடன் மீண்டும் ஒரு பயணம்... ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சூர்யா!
நடிகர் சூர்யா 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் கைகோர்க்கிறார். பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு சூர்யா 41 என்ற தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் வித்தையை சூர்யா கற்றுக்கொண்டது. 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில். அவருக்கு கற்றுக்கொடுத்தது இயக்குநர் பாலா. அதன் பிறகு பாலா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான 'பிதாமகன்' படத்தில் சூர்யா தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தார். இதன் காரணமாக பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் எப்போதும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் 'அவன் இவன்' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது.
இந்தநிலையில், நடிகர் சூர்யா 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் கைகோர்க்கிறார். பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு சூர்யா 41 என்ற தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நடிகர் சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், எனது வழிகாட்டியான இயக்குநர் பாலாவுடன் மீண்டும் இணைய காத்திருந்தேன்!!! 18 வருடங்களுக்குப் பிறகு இன்று அந்த மகிழ்ச்சியான தருணம் அரங்கேறியுள்ளது....! உங்கள் எல்லா வாழ்த்துகளும் எங்களுக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
Been waiting for #DirBala na my mentor to say Action!!! …After 18 years, it’s happiness today…! This moment… we need all your wishes! #Suriya41 pic.twitter.com/TKwznuTu9c
— Suriya Sivakumar (@Suriya_offl) March 28, 2022
இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்சிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த தகவல்களின் படி, சூர்யா இந்தப்படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
இந்த கதாபாத்திரத்திற்கான ஹோம் வொர்க்கில் சூர்யா இறங்கிவிட்டதாகவும், இந்தப்படத்திற்காக மதுரையில் செட் போடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்திற்காக, சூர்யா 60 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், சூர்யா இதில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்திற்கான படப்பிடிப்பும் இன்று தொடங்க இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்