Sunny Leone: தலைக்கு ஏறிய விரக்தி.. கோபத்தில் அரிவாள் எடுத்த சன்னி லியோன்.. வைரலாகும் வீடியோ!
ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
நடிகை சன்னி லியோனின் இன்ஸ்டாகிராம் பதிவைக் கண்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து அவர் பல முறை வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
Miss Pac-Man 😜
— Sunny Leone (@SunnyLeone) July 15, 2022
.
.
Makeup @StarStruckbySL
Shot by @DabbooRatnani pic.twitter.com/GFhH5ZAG5J
தொடர்ந்து கணவர், மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது வழக்கம். இதனாலேயே இவருக்கு ஏராளமனா ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கூட ரசிகர் ஒருவர் சன்னி லியோன் பெயரை டாட்டூவாக குத்திக் கொண்டதை எண்ணி நெகிழ்ச்சியடைந்தார்.
View this post on Instagram
தற்போது தமிழில் ஷீரோ, ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் திடீரென தான் கடும் விரக்தியில் இருப்பதாக கூறி கொலைவெறியுடன் மரம் ஒன்றை வெட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது ஷீரோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காட்டுப்பகுதி ஒன்றில் நடைபெற்று வருகிறது. அங்கு தான் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் நீங்கள் விரக்தியில் இருக்கும்போது இதுபோன்ற கடினமான வேலையை செய்யுங்கள். நன்றாக இருக்கும் என்ற பாணியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்