Spider-Man Across Spider-Verse: இனி எந்த தடையும் இல்லை.. ஓடிடியில் வெளியான ஸ்பைடர்மேன் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ஒரு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய ஸ்பைடர்மேன் திரைப்படம் தற்போது அனைவரும் பார்க்கும் வகையில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது
ஸ்பைடர்மேன் யுனிவர்ஸ் பட வரிசையில் இரண்டாம் பாகமாக வெளிவந்த ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் (spiderman across the spiderverse ) திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஸபைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்வர்ஸ் (spiderman across the spiderverse )
கடந்த 2018 ஆம் ஆண்டு சோனி மற்றும் மார்வெல் இணைந்து தயாரித்து வெளியான திரைப்படம் ஸ்பைடர்மேன் இன்டூ தி ஸ்பைடர் வெர்ஸ் (spiderman into the spiderverse) . இன்று பரவலாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் முதல் முறையாகத் தொடங்கியது இந்தப் படத்திலிருந்து தான். ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் (spiderman across the spiderverse ) . முதல் பாகம் அளவிற்கு இல்லையென்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது இந்தப் படம்.
தொடர்ந்து பல நாடுகளில் அடுத்தடுத்து வெளியான இப்படம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை செய்யப்பட்டது. சவுதி, அபுதாபி நாடுகளின் திரையரங்குகளில் ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் மார்வெல் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
LGBTQ+ கொடி
சென்சார் வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் இந்தப் படத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளில் தடைவிதிக்கப் பட்டதாக காரணம் கூறப்பட்டது. ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்தில் lgbtq+ அடையாளப்படுத்தும் வானவில் நிறக் கோடி ஒரு காட்சியில் இடம்பெற்றிக்கிறது. இந்தக் காட்சிக்கு தாலிபான் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வந்த காரணத்தினால் இந்தக் காட்சியை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது சென்சார் வாரியம். ஆனால் இந்தக் காட்சியை நீக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதால் இந்தப் படத்தை வெளியிட தடை விதித்தது ஐக்கிய அரபு நாடுகள்
கடந்த 2022 ஆம் ஆண்டு டிஸ்னி வெளியிட்ட லைட் இயர் திரைப்படமும் இதே காரணத்திற்காக ஐக்கிய அரபு நாடுகளில் தடைசெய்யப் பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஓடிடியில் வெளியான ஸ்பைடர் வெர்ஸ்
தற்போது இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஜீ ஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது இந்தப் படம்.
ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்
கடந்த ஜூன் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம். ஹேய்லி ஸ்டைல்ஃபீல்ட், ஷமீக் மூர், ஆஸ்கர் ஐச்சாக், கரண் சோனி ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் கே. தாம்சன் ஆகியவர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்கள். சோனி பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.