மேலும் அறிய

கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?

மறைந்த நகைச்சுவை நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் கிளாப் அடிப்பதில் மிகச்சிறந்தவர் என்று விக்ரமன் புகழாரம் சூடியுள்ளார்.

பிரபல இயக்குனர் விக்ரமன் ஒரு உதவி இயக்குனர் கிளாப் அடிப்பது என்பது எப்பேற்பட்ட கலை? என்பதையும், அதில் மிகச்சிறந்தவர் பிரபல நகைச்சுவை நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு முறை விக்ரமன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கிளாப் அடிப்பது கலை:

"அசிஸ்டன்ட் டைரக்டரா வந்த உடனே கிளாப் அடிச்சுடுவாரா? அது எவ்ளோ பெரிய கலை. இன்னைக்கு டிஜிட்டல் வந்த பிறகு சும்மா நம்பர் காமிச்சுட்டு போயிடலாம். சவுண்ட் முக்கியம் இல்ல. ஸ்டார்ட் சவுண்ட், ரோலிங் சொல்லி கேமராவோட ஆரம்பிச்சு கரெக்டா அடிக்கனும்.

அதுவும் அந்த சாக்பீஸ் புகை நடிகர்கள் கண்ணுக்குள் போயிடக்கூடாது. போயிடுச்சுனா கண்ணாபின்னாவா திட்டுவாங்க. டேக்கை கட் பண்ணிட்டு அந்த ஆர்ட்டிஸ்ட் டைரக்டர்கிட்ட என்ன சார் இப்படி ஒரு அசிஸ்டன்டை வச்சுருக்கீங்க?னு கேப்பாங்க. அந்த மாதிரி எல்லாம் இருக்கும். கிளாப் அடிக்குறது சாதாரண விஷயம் இல்லை.

இடிச்சபுளி செல்வராஜ்:

நான் அசிஸ்டன்ட்டா வந்த புதுசுல பிலிம் ஓடும், ரொம்ப டைம் எடுத்துக்கக்கூடாது, டக்குனு அடிச்சுட்டு போயிடனும். அது எல்லா அசிஸ்டன்ட் டைரக்டருக்கும் வராது. 80 சதவீத அசிஸ்டன்ட் டைரக்டர்ங்க அப்படி பண்ணமாட்டாங்க. பிலிம் வேஸ்ட் பண்ணுவாங்க. அதுலயே 2, 3 அடி வீணாகிடும். அதுல பெரிய எக்ஸ்பர்ட் இடிச்சபுளி செல்வராஜ்.

எல்லாரும் சொல்வாங்க 4 ஃப்ரேம்ல அவரு கிளாப் அடிப்பாருனு. எல்லா படத்துக்கும் எம்ஜிஆர் அவரைத்தான் அசிஸ்டன்டா வச்சுருந்தாரு. பின்னாடி பெரிய காமெடி நடிகரா வந்தாரு அவரு. என் படம் அவரு நடிச்சாரு. அப்போ அவர்கிட்ட கேட்டேன். என்னசார் எல்லாரும் உங்களை அந்த மாதிரி சொல்றாங்க. ஒரு தடவை அடிச்சு காட்டுங்கனு சொன்னேன். இந்த ஷாட்டுக்கு நீங்க கிளாப் அடிங்கனு சொன்னேன்.

மிரண்டுவிட்டேன்:

அவரு அடிச்சாரு பாருங்க. மிரண்டேன். நாலே ஃப்ரேம். கரெக்டா எடுத்தாரு. எடிட்டிங்ல நெகட்டிவை பாத்தா நாலே ஃப்ரேம்தான். அது பெரிய சாதனை. அதுக்குள்ள நம்பர் சொல்லி ஷார்ட் சொல்லி டேக் சொல்லி அடிச்சுட்டு போயிட்டாரு. இதெல்லாம் ஒரு பெரிய கலை. ஒயிட் ஷார்ட்ல எப்படி கிளாப் அடிக்கனும், ஃபீல்ட் கரெக்ட்டா? இதெல்லாம் அப்போ கேமரா வழியா பாக்குறதுக்கு டைரக்டர் விடமாட்டாரு. திட்டுவாங்க. மானிட்டர் கிடையாது.

நாமலா ஜட்ஜ் பண்ணிட்டு இதான் ஃபீல்ட். இதுக்குள்ள கிளாப் அடிக்கனும்னு சொல்லிட்டு பண்ணனும். எனக்கும் கிளாப் அடிக்கத் தெரியாது. நானும் திட்டு வாங்கிருக்கேன. எல்லாம் பண்ணிருக்கேன். அப்புறம் அப்படியே வந்து கத்துக்கிட்டேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

இடிச்சபுளி செல்வராஜ் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் முதல் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆயிரத்தில் ஒருவன், ஒளிவிளக்கு, ராமன் தேடிய சீதை, இதய வீணை, பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க, உழைக்கும் கரங்கள், இன்றுபோல் என்றும் வாழ்க என எம்ஜிஆரின் படங்களில் அவருக்கு உதவியாளராக இருந்ததுடன், ஒரு சில காட்சிகளிலும் நடித்துள்ளார்.

வசந்த அழைப்புகள் படத்தில் இவர் இடிச்சபுளி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இடிச்சபுளி செல்வராஜ் என்று பின்னாளில் அழைக்கப்பட்டார். பின்னர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிவகுமார், மோகன், அர்ஜுன், பிரபு என பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் 2012ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget