Freinds: இன்றளவும் பரவலாகப் பார்க்கப்படும் தொலைகாட்சித் தொடர் இது....சில சுவாரஸ்யமான தகவல்கள்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான ஃபிரண்ட்ஸ் தொடரைப் பற்றைய சில சுவாரஸ்யமான தகவல்கள்
இன்று தொலைக்காட்சித் தொடர்கள் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை பரவலாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஒரு காலத்தில் தொடர்களால வெளிவந்த தொடர்கள் இன்று வரை இந்த நவீனகாலத் தொடர்களுக்கு சமமாக போட்டியில் உள்ளன. இன்றளவும் மேலும் புதிய ரசிகர்கள் இந்தத் தொடர்களுக்கு உருவாகியும் வருகிறார்கள் . அமெரிக்க சிட்காம் தொடர்களில் மிகப் புகழ்பெற்றத் தொடர் என்றால் ஃப்ரண்டஸ் தொடரைச் சொல்லலாம்.கிட்டதட்ட பத்து ஆண்டுகள் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்த தொடர் என்றால் ஃப்ரண்ட்ஸ்தான். இன்று இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.இதற்கு முன்பு எத்தனை முறை பார்த்திருந்தாலும் மீண்டும் மீண்டும் இந்த தொடரின் ஒவ்வொரு எபிசோட்களை பார்த்தவன்னம் இருக்கிறார்கள் ரசிகர்கள்.கடந்த 2004 ஆம் ஆண்டு மே ஆறாம் தேதியான இதே நாளில் ஃபிரண்ட்ஸ் தொடரின் இறுதி எபிசோட் ஒளிபரப்பப் பட்டது. இந்த எபிசோடிற்கு the last one எனப் பெயரிடப் பட்டது.அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் 52 மில்லியன் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் பார்க்கப்பட்டது ஃபிரண்ட்ஸ். இன்றையத் தினத்தன்று ஃபிரண்ட்ஸ் தொடரைக் குறித்து நாம் அறியாத சில அரியத் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
பிரன்ட்ஸ் தொடரிற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்னத் தெரியுமா.இந்த தொடருக்கு முதலில் இன்சோம்னியா கஃபெ (insomnia café) எனப் பெயர் சூட்டியிருந்தனர் இதன் இயக்குனர்களான டேவிட் க்ரேன் மற்றும் மார்தா காஃப்மன். இந்தக் கதையின் படி ராஸ் மற்றும் ரேச்சல் முக்கிய கதாபாத்திரமாக இருப்பதற்கு பதிலாக ஜோய் மற்றும் மோனிகா ஆகிய இருவர்தான் ஜோடிகளாக முடிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
பின்பு இந்த தொடருக்கு friends like us என்று பெயர் வைக்கப் பட்டிருந்தது.மேலும் பல குழப்பங்களுக்கு பின் 1994 செப்டம்பர் 22 ஆம் தேதி இந்த தொடர் ஒளிபரப்பான போது மிக எளிமையான ஃபிரண்ட்ஸ் என்கிற பெயர் வைக்கப்பட்டது.
இந்த தொடர் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.
.அதேபோல் இப்போதைய கதையாக இல்லாமல் முற்றிலும் வேறு ஒரு கதைக்களத்தை மையமாக கொண்டிருந்ததாம் இந்த தொடர்.
அதே நேரத்தில் இன்று ஒவ்வொருவருக்கும் பிடித்தமான கேரக்டர்களாக இருக்கும் யாருமே அன்று நடிப்பதற்காக தேர்வு செய்யப் படவில்லை.இந்தத் தொடரில் நடிப்பதற்காக முற்றிலும் வேறு ஒரு நடிகர்கள் குழுவை தேர்வு செய்து வைத்திருந்தது.
முக்கியமாக ரேச்சல் கதாபாத்திறத்திற்கு கோர்ட்னி காக்ஸ் தேர்வு செய்யப் பட்டிருந்தார் ஆனால் கோர்ட்னி ரேச்சல் கதாபாத்திரத்தை விட அதிகம் ஆர்வம் காட்டியது மோனிகா கதாபாத்திரத்தின் மேல்தான்.அதனால் அவர் மோனிகா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.