மேலும் அறிய

சிவன் - பார்வதி சுவாரஸ்யம்.. விறுவிறுப்பான கதைக்களத்துடன் 'சிவசக்தி திருவிளையாடல்'

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு விறுவிறுப்போடும், திடீர் திருப்பங்களோடும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் 'சிவசக்தி திருவிளையாடல்'

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு மிகவும் பிரமாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக புராண தொடர் 'சிவசக்தி திருவிளையாடல்'. சுவாரஸ்யமான திரைக்கதையோடு, மிகுந்த பொருட்செலவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 

பிரஜாபதி தட்சன் செய்த தவப்பயனால் தாட்சாயிணி சதி என்கிற பெயரில், அவருக்கு மகளாக அவதரிக்கிறாள் ஆதிபராசக்தி. சிவன் மீது காதல் கொள்ளும் சதி, பிரஜாபதி தட்சன் தடைகளை தகர்த்தெறிந்து சிவனை கரம் பிடிக்கிறார். ஆனால், தட்சண் செய்யும் ஒரு யாகம் மூலம் தாட்சாயிணி வாழ்விலும் சிவன் வாழ்விலும் ஆறாத துயரம் நிகழ்கிறது.

சதி தன் உடலை அக்னிக்கு இரையாக்குகிறார். இதனால் கோபம் அடையும் சிவன் வீரபத்ரராக உருவெடுத்து பிரஜாபதி தட்சனின் ஆணவத்தை அடக்கி அவர் தலையினைக் கொய்கிறார். கோபம் அடங்காத சிவன் இவ்வுலகினையே அழிக்கும் அளவுக்குச் செல்கிறார். அதனை நாராயணர் தடுக்கிறார். ஆனாலும் கோபம் அடங்காத சிவன் ஆழ்ந்த தவத்திற்குள் மூழ்குகிறார்.

இப்பூவுலகின் சுழற்சிக்கு சிவன் – சக்தியின் சேர்க்கை தேவை என்பதை உணர்ந்த நாராயணர், பிரம்மன் மற்றும் தேவர்கள் சக்தியை வேண்ட, சக்தி பார்வதியாக உருவெடுக்கிறார். 

 

சிவன் - பார்வதி சுவாரஸ்யம்.. விறுவிறுப்பான கதைக்களத்துடன் 'சிவசக்தி திருவிளையாடல்


இமயமலை அரசன் ஹிம்மான் - மைனாதேவி தம்பதிக்கு மகளாக பிறக்கிறார். சிவனின் மீது இளம் வயது முதலே பக்திகொண்டு வளர்கிறாள்.திருமண வயதை அடையும் பார்வதி திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். ஆனால் சிவனின் தவம் அதற்கு பெரும் தடையாக இருக்கிறது. நாராயணர் ஏற்பாட்டில் மன்மதனும் ரதியும் சிவனின் தவத்தினைக் கலைக்கிறார்கள். தவம் கலைந்ததில் கோபம் அடையும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து விடுகிறார். 

காதல் கணவனை இழந்த ரதி கோபத்தில் பார்வதியை நோக்கி ”உனக்காகத்தான்  சிவனின் தவத்தினைக் கலைத்தோம். அதனால் தான் இப்போது மன்மதனை இழந்து நிற்கிறேன். இந்த பாவம் உன்னைச் சும்மா விடாது. உனக்கும் சிவனுக்கு திருமணம் நடந்தாலும் உனக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது” என்று சபித்துவிடுகிறார்.

ஒரு புறம் சிவன் மீதான காதல், மறுபுறம் ரதியின் சாபம், பார்வதி கலங்கிப் போகிறார். சதியின் மறைவை மறக்க முடியாமல் தவிக்கும் சிவனை – பார்வதியோடு சேர்த்துவைக்க நாராயணரும் மற்ற தேவர்களும் படாத பாடு படுகிறார்கள்.

அதே நேரத்தில் அரக உலகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தால் அரக்கர்களுக்கு நல்லதல்ல, எனவே இதைத் தடுக்க வேண்டும் என்று தாரகாசுரன் சுக்ராச்சாரியாரின் உதவியுடன் பல சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறான்.

ஒரு கட்டத்தில் மனம் மாறும் சிவன் பார்வதி தான் ஆதிபராசக்தி என்பதை உணர வேண்டும் என்பதற்காக பல சோதனைகளைத் தருகிறார். அரக்கன் தாரகாசுரனின் சதிகளைத் தகர்த்து, கடும் தவம் செய்து பார்வதி சிவனின் மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால் பார்வதியின் தாய் மைனாதேவி சிவனுக்கு பார்வதியைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார். ”ரதியின் சாபத்தினால்  சிவனுக்கும் பார்வதிக்கு திருமணம் நடந்தால், பார்வதிக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது. அப்படியிருக்கும் போது ஒரு தாயாக பார்வதியை சிவனுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது” என்று தன் வாதத்தை முன்வைக்கிறார்.

நாராயணர் மற்றும் தேவர்களால் மைனாதேவியின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். வரும் வாரத்தில் சிவன் பார்வதியை என்ன திருவிளையாடல்கள் செய்து திருமணம் முடிக்கிறார் என்பது தான் கதைக்களம். 

சிவசக்தி திருவிளையாடல் தொடரின் திரைக்கதையில்  திடீர் திருப்பங்கள், பாரதத் தேசத்தின் ஆன்மிகப் புராணச் செய்திகளை சேர்த்து விறுவிறுப்பாகவம் ஸ்வாரஸ்யமாகவம் வழங்கி வருகிறது கலர்ஸ் தொலைக்காட்சி. 

சிவன் - பார்வதி  ஒன்று சேர்வர்களா? திருமணம் நடக்குமா?  அரக்கன் தாரகாசுரன் என்ன சதி செய்யப் போகிறான்? என இவை அனைத்தையும் விறுவிறுப்போடும், திடீர் திருப்பங்களோடும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும்  இந்த தொடரை காணாதவறாதீர்கள். 

தலைப்பு செய்திகள்

ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget