Sivakarthikeyan Doctor | யு/ஏ சான்றிதழ் வாங்கியது சிவகார்த்திகேயனின் 'டாக்டர்’..
கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரம்ஜான் ரிலீஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக 'ஹீரோ' திரைப்படம் ரிலீஸானது. மித்ரன் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் அர்ஜூனுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நெல்சம் திலீப்குமார் 'டாக்டர்' படத்தில் கமிட்டானர். டாக்டர் வருண் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இப்படத்தில் படத்தின் ஹீரோயினாக பிரியங்கா மோகன் கமிட்டானர். படத்தின் முக்கியமான கேரக்டரில் யோகி பாபு மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரம்ஜான் ரிலீஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளி போனது. இதுக்கு முன்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயனை ட்விட்டரில் அன்பாலோ செய்ததும் குறிப்பிட்டதக்கது. மேலும், படத்தின் ரிலீஸ் தொடர்பாக சிவகார்த்திகேயனுக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பிரச்னை எழுந்துள்ளதாக தகவலும் வெளியாகின.
இதற்கு இடையில், படம் முழுவதும் தயாரான நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டது. மேலும், இப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் அல்லது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் 'டாக்டர் படத்தின் தணிக்கை சான்றிதழ் இன்று வெளியாகி உள்ளது. யு.ஏ. சான்றிதழ் பெற்றிருக்கும் 'டாக்டர்' படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய் படத்தை இயக்கி வருவதும் குறிப்பிடதக்கது.