Sivakarthikeyan: கே.ஜி.எஃப் படம் மாதிரி... ஓபனாக மனம் திறந்த சீமராஜா சிவகார்த்திகேயன்..!
கே.ஜி.எஃப் 2 மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.
கே.ஜி.எஃப் 2 மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசும் போது, “ஒரு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரும் போது நமக்கு ஒரு சந்தேகம் வரும். உடனே நிறைய பேரிடம் கேட்போம். ஒரு கட்டத்தில் நமக்கே படம் தோல்வி என்பது தெரிந்து விடும். என்னுடைய சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சீமராஜா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரவில்லை. அதை அடித்து துவம்சம் செய்து விட்டார்கள். அந்தப்படத்தின் ஷேர் 25 கோடி. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விஷயத்தை சரி செய்து கொள்கிறேன்.
View this post on Instagram
கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றியை பற்றி பேசிய சிவகார்த்திகேயன், “ யஷ்ஷின் வயது அனுபவமெல்லாம் என்னை ஒத்ததாக இருக்கலாம். ஆனால் அவரது வெற்றி பிரம்மாண்டமாக மாறியுள்ளது. பயங்கர இன்ஸ்ஃபயராக இருக்கிறது. நாமும் அதை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது" என்று பேசியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக டாக்டர் படம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக டான் படம் மே 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து இராண்டாவது முறையாக ப்ரியா மோகன் இந்தபடத்தில் அவருடன் இணைந்துள்ளார். சரவணன் பாலா, எஸ்.ஜே.சூர்யா, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப்படம் வருகிற மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.