Siragadikka Aasai: மீனா கைக்கு செல்லும் வீட்டுப் பத்திரம்.. சிக்கிய ஸ்ருதி- ரவி... ‘சிறகடிக்க ஆசை’ இன்று!
Siragadikka Aasai Serial Sep.28: வீட்டுப் பத்திரம் மீனாவிடம் சென்றதால் கோபத்தில் உள்ள விஜயா. ஸ்ருதியின் பெற்றோரிடம் சிக்கிய ஸ்ருதி-ரவி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் இன்றைய எபிசோடில், பைனான்சியரிடம் இருந்து மீட்டு வந்த பத்திரத்தை அண்ணாமலை மீனாவிடம் கொடுத்து பத்திரமாக வைக்க சொல்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார். ரோகிணி, மனோஜ் இருவரும் ஷாக் ஆகின்றனர். ஆனால் மீனா பத்திரத்தை வாங்க மறுப்பதுடன், பத்திரம் அத்தை கிட்டையே இருக்கட்டும் என்கிறார்.
இதைக் கேட்ட விஜயா, “அடியே ஏன் வீட்டு பத்திரத்தை எனக்கே பிச்சை போடுறுறியா நீ?” என ஆவேசப்படுகிறார். முத்து பதிலுக்கு “நீங்களே உழைச்சி வாங்கின மாதிரி பேசுறீங்க” என வழக்கம் போல் கலாய்க்கிறார். நான் “இந்தக் குடும்பத்துக்காக தான் பத்திரத்தை அடகு வைத்தேன்” என்கிறார் விஜயா. இதைக் கேட்ட முத்து அப்பா, “அம்மாவை பொருத்த வரை குடும்பம்னா மனோஜ் தான் இப்போ, இந்த மேக்கப் பெண்ணையும் சேர்த்துக்கிட்டாங்க” என்கிறார்.
“பார்லர் வாங்க தாங்க நான் பணம் கொடுத்தேன். பார்லரில் வரும் வருமானத்தை அவங்க மட்டுமா வச்சிக்கிட்டாங்க?” என்கிறார் விஜயா. “அம்மா நல்லா பேசி சமாளிக்குறாங்க” என்கிறார் முத்து. “அப்படியே அந்த 27 லட்சம் பணத்தையும் கொடுக்க சொல்லுங்க” என்றார் முத்து. உடனே விஜயா, “ஏய் ரோகினி தான் இந்த வீட்டுல நிறைய சம்பாதிக்குறா வீட்டுக்கும் கொடுக்குறா. தோ உன் பொண்டாட்டி, பூ கட்டி அஞ்சும் பத்தும் சம்பாதிக்குறா மாதிரி இல்லை” என்கிறார்.
“என்னங்க, பத்திரத்தை திருப்பினது ரோகிணி பணத்துல தானே.. பத்திரத்தையாவது அவ கிட்ட கொடுக்கலாம் இல்ல” என்கிறார் விஜயா. முத்து “அதெல்லாம் வேண்டாம் பா இவன் இருக்குற இடத்துல பாத்திரத்தை வைக்கிறதும் பூனை இருக்குற இடத்துல மீனை வைக்கிறதும் ஒன்று தான்” என்கிறார். “இவனாவது சாதாரண திருட்டு பூனை பா. எங்க அம்மா இருக்காங்களே பெரிய திருட்டு யானை” என்கிறார் முத்து. உடனே மீனா சிரிக்கிறார்.
விஜயா, “ஏங்க பத்திரத்தை என்கிட்ட கொடுங்க” என்கிறார். அதற்கு அண்ணாமலை, “அதற்கு பத்திரத்தை பைனான்சியர் கிட்டயே கொடுத்திடலாமே” எனக் கூறுகிறார். பின் மீனாவிடம் பத்திரத்தை கொடுத்து வைக்க சொல்கிறார். மீனா தயக்கத்துடன் பத்திரத்தை வாங்கி பீரோவில் வைக்கிறார். உடனே விஜயா மீனாவிடம் சென்று “நினச்சதை சாதிச்சிட்ட இல்லை. பத்திரத்தை உன் கைக்கு வர வச்சிட்ட. இதுக்கு தானே இந்த வீட்டுக்குள்ளேயே வந்த” என்கிறார்.
“புறாக்கூடு மாதிரி வாடகை வீட்டுல பொறந்தவ நீ. உன்கிட்ட என் சொந்த வீட்டு பத்திரம் வந்துருக்கு பார்த்தியா? நல்லா கைல வச்சி பார்த்துக்கோ. உனக்கெல்லாம் இப்டி கைல வந்தா தான் உண்டு தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நீயெல்லாம் சொந்த வீட்டுல இருக்க முடியாது என்கிறார் விஜயா. உடனே மீனா, நீங்க சொல்வது சரிதான். நான் வாடகை வீட்ல தான் வளர்ந்தேன். உலகத்துல பொறக்குற எல்லோரும் மண்ணுக்குள்ள தான் போக போறோம் அது வெறும் ஆறடி நிலம் தான். இதுல சொந்த வீடு வாடகை வீடுனு என்ன இருக்கு? எதுவும் இங்கு நிரந்தரம் இல்ல என்கிறார்.
மீனா “பத்திரத்தை எடுத்து நீங்களே வச்சுக்கோங்க” என்று விஜயாவிடம் கொடுக்கிறார். “இதை நீ கொடுத்து நான் வாங்கன்னுமா? அது தானவே என்கிட்ட வரும்” என்கிறார் விஜயா. “இது எப்டி என் கைக்கு வருதுனு பாருடி என்று சவால் விடுகிறார் விஜயா? முத்து உன்னை தூக்கி வச்சி ஆடுறானு நீ தலைக்கணமா இருக்காத. அவனாலேயே ஒரு நாள் நீ அழுதுகிட்டு நிற்க போற பாரு” என்று கூறி விட்டு கோபமாக செல்கிறார் விஜயா.
விஜயா மனோஜ் இடம் சென்று “சொந்த வீடு இருக்க என்னையே இந்த பாடு படுத்துறாங்க, உனக்கு ஒரு வேலை இல்லை. முத்துவுக்கு நீ வேலை இல்லாம இருக்குறது தெரிஞ்சது உன்ன ஒரு வழி பன்னிடுவான்” என்கிறார் விஜயா.
அடுத்ததாக ரவி ஷ்ருதியை சந்துத்து பேசுகிறார். “கொஞ்சம் கூட உனக்கு ரொமாண்டிக்காவே பேச வரதா ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வந்தாலும் 2 வாங்கிட்டு வர” என்கிறார். “ரிலேஷன்ஷிப் நல்லா இருக்கனும்னா ஸ்பேஸ் கொடுக்கனும்” என்கிறார் ரவி. தொடர்ந்து ஸ்பேஸ் ரிலேஷன்ஷிப் தொடர்பாக இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின் இருவரும் ஐஸ் க்ரீமை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவ்வழியாக காரில் செல்லலும் ஷ்ருதியின் அம்மாவும் அப்பாவும் அதை பார்த்து விடுகின்றனர்.
ஷ்ருதியின் அம்மா கோபமாக காரில் இருந்து இறங்கி செல்கிறார். ஆனால் அவரின் கணவர் தடுத்து விடுகிறார். அவள் பிடிவாதமானள் என கூறும் அவர், “அவளை வேறுவிதமாக தான் கண்ட்ரோல் செய்ய வேண்டும். நான் பிஜூ வீட்டில் பேசுகிறேன். அந்த குடும்பத்தால் தான் இவளை கண்ட்ரோல் செய்ய முடியும்” என்கிறார்.
விஜயாவின் தோழி பார்வதி அவரின் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் மீனா குறித்து கோபமாக பேசுகிறார் விஜயா . மீனாவை எதிரி என்றெல்லாம் பேசுகிறார். “அவள நான் கதற விடுறேனா? இல்லையானு பாரு” என்கிறார். பார்வதி ரவியின் திருமணம் குறித்து பேசுகிறார். அதற்கு விஜயா “என் தோழி வசந்தி வசதியானவள் என்றும் அவளின் மகளுக்கு ரவியை பேசி முடிச்சிடலாம்னு இருக்கேன்” என்கிறார். “ரவியை நான் பேசி சம்மதிக்க வச்சிடுவேன்” என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.