இதுவே வேலையாதான் இருக்காரு...பிரபலங்களிடம் கைவரிசையை காட்டிய உதித் நாராயண்
இசை நிகழ்ச்சியில் செல்ஃபீ எடுத்துக் கொள்ள வந்த பெண்களுக்கு பாடகர் உதிர் நாரயண் முத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு அவர் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

உதித் நாராயண்
பாலிவுட் பின்னணி பாடகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, நேபாளி, போஜ்புரி மற்றும் பல மொழிகளில் பாடக்கூடிய திறமையானவர் பாடகர் உதித் நாராயண். தன்னுடைய அசாத்தியமான மயக்கும் தனித்துமான குரல் வளத்தால் மூன்று தேசிய விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார்.
செல்ஃபீ எடுக்கவந்த பெண்களுக்கு முத்தம்
சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள வந்த பெண்களுக்கு அவர் கன்னத்தில் மற்றும் உதட்டில் முத்தம் கொடுத்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ பெரும் பேசுபொருளாகிய நிலையில் பிரபல பாடகியான ஷ்ரேயா கோஷல் மற்றும் அல்கா யாக்னிக் ஆகிய இருவருக்கும் உதித் நரேன் முத்தம் கொடுத்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது
Everyone is trolling and criticizing Udit Narayan, which is fair, but no one is questioning the lady who kissed him first.
— Sann (@san_x_m) February 2, 2025
That’s how our morally corrupt, hypocritical society works. 😏#UditNarayan pic.twitter.com/qLcnRq4YRt
ஷ்ரேயா கோஷலுக்கு முத்தம் கொடுத்த உதித் நரேன்
பிரபல பின்னணி பாடகிகளான அல்கா யாக்னி , ஷ்ரேயா கோஷல் மற்றும் நடிகை கரிஷ்மா கபூர் போன்ற பிரபலங்களுக்கு பொதுவாக வைத்து உதித் நாராயன் ஏற்கனவே முத்தம் கொடுத்துள்ளார். அவரை யாரும் கண்டிக்காத நிலையில் தற்போது இதையே இவர் பழக்கமாக மாற்றிக் கொண்டுவிட்டார் என பலர் இந்த வீடியோக்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்
View this post on Instagram





















