இதைத் தவிர்த்து, சுகாதாரமான முறையில் வீட்டிலேயே மஞ்சள் தூளை தயாரிக்க முடியும்.எந்த ரசாயனமும் கலக்காத இயற்கையான பொருட்களைக் கொண்டு விளைந்த 'ஆர்கானிக் மஞ்சளை இதற்கு பயன்படுத்தலாம்.

ஆர்கானிக் மஞ்சள் தூள் தயாரிப்பது எப்படி?

Published by: ஜான்சி ராணி

சமையலில் மஞ்சளுக்கு முக்கியமான இருக்கும் 'குர்குமின்' எனும் மூலக்கூறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

தரமான மஞ்சள் கிழங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கவும் அதன் வேர்ப்பகுதியில் மண் இருக்கும் என்பதால். 15 நிமிடங்கள் தண்ணீணில் போட்டு வைக்கவும்.

பிறகு இரண்டு முறை நன்றாகக் கழுவிக்ாள்ள ஒரு அகன்ற பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பவரம்மஞ்சன கிழங்குகளை அதில் போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு தண்ணீரை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும்.

மஞ்சள் கிழங்குகள் ஆறிய பின்பு, அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு அவற்றை சுத்தமான பருத்தித் துணியில் பரப்பி, வெயிலில் நன்றாக உலர வைக்கவும். மஞ்சளில் இருக்கும் ஈரப்பதம் முழுவதுமாக நீங்குவதற்கு ஒரு வாரம் ஆகும்.

அவற்றை ஈரப்பதம் இல்லாத மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அந்தப் பொடியை நன்றாக சலித்துக்கொள்ளவும். அதை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி, காற்று புகாமல் மூடி வைக்கவும்.

இரண்டு கிலோ மஞ்சள் கிழங்கை, நன்றாகக் காய்ந்த பிறகு அரைத்தால் 300 கிராம் மஞ்சள் பொடி கிடைக்கும்

இப்போது சுத்தமான முறையில் நாமே தயாரித்த, ஆர்கானிக் மஞ்சள் தூள் தயார்.