![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jasmin Bhasin: பார்க்க முடியல... தூங்க முடியல... சரியாக இன்னும் நாலு நாள் ஆகுமாம்... சிம்பு பட நடிகைக்கு கண் பார்வை பாதிப்பு
Jasmin Bhasin : 'வானம்' படத்தில் நடிகர் சிம்புவுடன் நடித்த ஜாஸ்மின் பாசின் கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
![Jasmin Bhasin: பார்க்க முடியல... தூங்க முடியல... சரியாக இன்னும் நாலு நாள் ஆகுமாம்... சிம்பு பட நடிகைக்கு கண் பார்வை பாதிப்பு Simbu movie Actress Jasmin bhasin cornea has got affected not able to see sleep Jasmin Bhasin: பார்க்க முடியல... தூங்க முடியல... சரியாக இன்னும் நாலு நாள் ஆகுமாம்... சிம்பு பட நடிகைக்கு கண் பார்வை பாதிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/22/e63c171ffbe98db3546279acc8ce5c501721642385068224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஷன்-இ-இஷ்க் மற்றும் தில் சே தில் தக் உள்ளிட்ட இந்தி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜாஸ்மின் பாசின். ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது அவர் கண்பார்வையில் பிரச்சினை என்ற தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான 'வானம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் ஜாஸ்மின் பாசின். சிம்புவை ராஜ் ராஜ்... என செல்லமாக பார்ட்டிக்கு அழைத்து சென்ற பிரியா தான் ஜாஸ்மின் பாசின். 2016ம் ஆண்டு வெளியான 'ஜில் ஜங் ஜக்' படத்திலும் நடித்திருந்தார்.
புது டெல்லியில் ஒரு நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்கு முன் கண் லென்ஸ்களை அணிந்த ஜாஸ்மின் கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. வலியை பொறுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால் கொஞ்ச நேரத்தில் வலி கடுமையானதாக மாற ஒரு கட்டத்திற்கு பிறகு அவரால் எதையுமே பார்க்க முடியாமல் போனது என பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளார். உடனே கண்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை விரைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில் " கடுமையான வலியை அனுபவித்து வருகிறேன். இன்னும் நான்கைந்து நாட்களில் குணமடைய வேண்டும் என்றும், அது வரை கண்களை நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். என்னால் பார்க்கவும் முடியவில்லை. தூங்கவும் மிகவும் சிரமமாக இருக்கிறது" என தன்னுடைய தற்போதய நிலை குறித்து தெரிவித்துள்ளார் ஜாஸ்மின் பாசின்.
தற்போது அர்தாஸ் சர்பத் தே பல்லே தி என்ற பஞ்சாபி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிரிப்பி கிரேவால் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)