சித்தார்த் நடித்துள்ள 3BHK படம் எப்படி இருக்கு...சோசியல் மீடியா விமர்சனம் இதோ
ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார் , சரத்குமார் , தேவயானி ஆகியோர் நடித்துள்ள 3BHK படத்தின் சோசியல் மீடியா விமர்சனங்கள் வெளியாகியுள்ளன

3BHK விமர்சனம்
ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் 3BHK. மீதா ரகுநாத் , சரத்குமார் , தேவயானி , சைத்ரா , யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஸ்வா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். நாளை ஜூலை 4 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
3BHK திரைப்படம் ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கனவுகளையும் அவர்களின் தியாகங்களையும் மிக எதார்த்தமாக சித்தரித்துள்ளது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக சரத்குமார் தனது உடல் நிலையைக் கூட பார்க்காமல் தனது பிள்ளைகளை படிக்க வைக்க போராடுகிறார். தனது தந்தையின் (சரத்குமார்) கனவை நிறைவேற்ற அவரது மகன் சித்தார்த் தனக்கு பிடித்த வேலையை விட்டுவிட்டு பிடிக்காத வேலைக்கு செல்கிறார். மகள் மீதா ரகுநாத் தனது படிப்பை கைவிட்டு மாமியார் வீட்டில் நடக்கும் கஷ்டங்களை சகித்துகொள்கிறாள். சித்தார்த் , சரத்குமார் , தேவயானி , மீதா என படத்தில் அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள்." என விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். #3BHK - 4 out of 5, A moving drama from @sri_sriganesh89 who has portrayed every middle class family’s dream of owning a home (especially people who settled in Chennai). But the film not just talks about that! It beautifully captured the pressure of a middle class young boy, how… pic.twitter.com/mQhHB24S3R
— Rajasekar (@sekartweets) July 2, 2025
3BHK படத்திற்கு எல்லா பக்கமும் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
#3BHK - 3.75 stars. Such a wholesome movie. About shattered dreams, survival and delayed success. One of those rare films that has at least half a dozen highly relatable moments that’ll connect with you on a personal level. For a film that sells the dream of owning a home, it… pic.twitter.com/r067Qn74Ph
— Haricharan Pudipeddi (@pudiharicharan) July 2, 2025





















