Video Shruthi Haasan : ராஜா கைய வெச்சா.. அசால்ட்டாக அசத்தல் டான்ஸ் ஆடிய கமலின் செல்ல மகள்..
அப்பாவின் பாடலுக்கு அசால்டாக டான்ஸ் ஆடிய ஸ்ருதிஹாசன்
துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் ராஜா கைய வெச்ச பாடலிற்கு அசத்தலாக நடனமாடி ஒரு வீடியோவை இன்ஸ்டாவில்
பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அவரின் தந்தையாகிய கமல் நடனம் ஆடிய ராஜா கைய வெச்சா பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
View this post on Instagram
அந்த பதிவில், “ மோட்டார்வண்டி பார்க்கும்போது” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் கடினமான நடன அசைவை அசால்ட்டாகவும் ஸ்டைலாகவும் ஆடியுள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில், அப்பு மற்றும் ராஜா ஆகிய இரட்டை வேடங்களில் கமல் நடித்திருப்பார். ராஜா கைய வெச்சா பாடல் ராஜா கதாப்பாத்திரத்தின் எண்ட்ரி சாங் ஆகும். இப்பாடலை இளையராஜா இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
2017 முதல் 2020 முதல் சற்று சைலண்ட்டாக இருந்த ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு வக்கீல் சாப், லாபம், பிட்ட காத்தலு, க்ராக் மற்றும் பவர் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து அசத்தினார். தற்போது NBK107 மற்றும் சலார் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.கோபி சந்த் மாலினேனியின் NBK107 படத்தில் நந்தமுரி பாலாகிருஷ்ணாவுடன் நடித்துவிட்டுதான் துருக்கிக்கு கிளம்பினார் ஸ்ருதிஹாசன்.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: வெளியானது பிக் பாஸ் சீசன் 6-ன் புதிய லோகோ.. பங்கேற்பாளராக களமிறங்குறாரா ஜி.பி.முத்து?
Rajinikanth: விரைவில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி...எப்போ தெரியுமா? : அண்ணன் வெளியிட்ட தகவல்