Ajith Kumar: என் தோழன் நீ அல்லவா.. மகனுடன் ஷாப்பிங்கில் அஜித்.. ஷாலினி வெளியிட்ட க்யூட் புகைப்படம்!
Shalini Ajith :நடிகர் அஜித் தனது மகனுடன் ஷாப்பிங் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து லைக்ஸ்களை குவிக்கும் ஷாலினியின் லேட்டஸ்ட் போஸ்ட்.
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'துணிவு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது அவர் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. திரிஷா, ரெஜினா, அருண் விஜய், அர்ஜுன் தாஸ், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர் அஜித்துக்கு பல முறை பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பைக் ரேஸிங், கார் ரேஸிங் அனைத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஜித் பல விபத்துகளில் சிக்கி ஏராளமான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் அவர் ஆண்டு தோறும் தவறாமல் செய்து கொள்ளும் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று சிறிய சிகிச்சை மேற்கொண்டது தான் வெவ்வேறு விதமாக வதந்தியாக பரவியது. அஜித் மேலாளர் விளக்கம் கொடுத்த பின்னர் தான் இந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அடுத்த நாளே மகனின் பள்ளிக்குச் சென்று கால்பந்து விளையாடுவதை பார்த்து ரசித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது.
View this post on Instagram
அதைத் தொடர்ந்து தற்போது நடிகையும் நடிகர் அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் போட்டோ போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் நடிகர் அஜித் குமார் தன்னுடைய மகன் ஆத்விக்குடன் ஷூ ஷாப்பில் மகனுக்கு ஷூ மாட்டி விடுகிறார். “'உங்களால் வெல்ல முடியாது' என்று உங்களிடம் சொல்லக்கூடியவர் நீங்கள் தான், ஆனால் நீங்கள் கேட்க வேண்டியதில்லை” என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்டை பகிர்ந்துள்ளார் ஷாலினி அஜித். அவரின் இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருவதும் நடிகர் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.