Dunki: பட்டையைக் கிளப்பும் ஷாருக்கின் ' டங்கி' முன்பதிவு.. முதல் நாள் மட்டும் இத்தனை கோடிக்கு ப்ரீபுக்கிங்கா?
Dunki Pre Booking : நடிகர் ஷாருக்கானின் 'டங்கி' படத்தின் டிக்கெட் முன்பதிவு விவரம் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
2023ம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. 'பதான்', 'ஜவான்' என இரு பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த ஷாருக்கான், ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடும் விதமாக வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக உள்ளது 'டங்கி' திரைப்படம் .
ராஜ்குமார் ஹிரானி - ஷாருக்கான் :
முன்னாபாய் தொடர், 3 இடியட்ஸ், பிகே, மற்றும் சஞ்சு போன்ற வெற்றிப் படங்களின் மூலம் மிகவும் பிரபலமான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் முதல் முறையாக நடிகர் ஷாருக்கான் ஜோடி சேர்கிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் 'டங்கி' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், பொமன் இரானி, விக்ரம் கோச்சார், அனில் குரோவார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமூகப் பிரச்சினை :
சமூக பிரச்சினைகளை சுற்றிலும் படத்தை இயக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, இப்படத்தில் மற்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுதல் குறித்த பிரச்சினையை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் ஷாருக்கான் தனது நண்பர்களுடன் லண்டனில் செட்டிலாக விரும்பும் ஒரு நபராக நடிக்கிறார் என்பது வெளியான 'டங்கி' படத்தின் டீசர் மூலம் அறியப்படுகிறது.
அட்வான்ஸ் புக்கிங் நிலவரம் :
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் 'டங்கி' படத்தின் அட்வான்ஸ் புக்கிங் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Sacnilk.com வெளியிட்டுள்ள தகவலின்படி 'டங்கி' படத்தின் ஓப்பனிங் நாள் அன்று 6,394 காட்சிகள் திரையிடப்பட உள்ளனர் என்றும், அதற்கு சுமார் 1,44,186 டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் ஒரு நாள் வசூல் குறைந்தது ₹4.45 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. 2டி வடிவில் இந்தியில் மட்டும் வெளியாக உள்ள படத்தின் வசூல் நிலவரம் இதுவாகும்.
பிரபாஸின் 'சலார்' :
அந்த வகையில் நடிகர் ஷாருக்கானின் 'டங்கி' படத்துடன் பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'சலார்' படம் கிளாஷ் ஆக கூடாது என்பதற்காக பிரபாஸின் சலாரை டிசம்பர் 22ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அப்படத்தின் இந்தி வர்ஷனுக்கு மட்டும் ₹55 லட்சம் மதிப்பிலான 16000 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு பதிப்பின் காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 125.8K டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டால் அதன் மதிப்பு சுமார் 3 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரமேஷ் பாலா பதிவு :
நடிகர் ஷாருக்கானின் 'டங்கி' படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவான இந்த வரவேற்பை பார்த்த திரைப்பட வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலா தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ஷாருக்கானின் டங்கி திரைப்படத்துக்கு ஏற்கேனவே ஒரு லட்சம் டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்பனையாகிவிட்டன எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் மூன்றாவது 1000 கோடி வசூல் என்ற இமாலய சாதனையை ஷாருக் முறியடிப்பாரா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.